LOADING...
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு: ஏப்ரல் 17 முதல் ஜாலியோ ஜாலி, பள்ளிகள் மீண்டும் எப்போது திறக்கப்படும்?
ஏப்ரல் 17 முதல் பள்ளி மாணவர்களுக்கான கோடை விடுமுறை (pc: https://yourstory.com/)

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு: ஏப்ரல் 17 முதல் ஜாலியோ ஜாலி, பள்ளிகள் மீண்டும் எப்போது திறக்கப்படும்?

எழுதியவர் Venkatalakshmi V
Apr 10, 2026
07:36 am

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் 2025-26 கல்வியாண்டு நிறைவடைய உள்ள நிலையில், பள்ளி மாணவர்களுக்கான கோடை விடுமுறை மற்றும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் தேதிகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. கோடைக்கால வெப்பம் மற்றும் தேர்தல் பணிகளை கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஏப்ரல் 17-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது. தற்போது மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், ஏப்ரல் 16-ஆம் தேதியுடன் தேர்வுகளும் நிறைவடைகின்றன. வழக்கமாக மே மாதம் தொடங்கும் விடுமுறை, இந்த ஆண்டு சற்று முன்னதாகவே ஏப்ரல் மாதத்தின் பாதியிலேயே தொடங்குகிறது.

திறப்பு

பள்ளிகள் மீண்டும் திறப்பு

விடுமுறைக்கு பிறகு 2026-27ஆம் கல்வியாண்டிற்கான பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் தேதியையும் கல்வித்துறை அறிவித்துள்ளது. இதன்படி, 4 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஜூன் 1-ஆம் தேதி (திங்கட்கிழமை) பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும். 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே மாதத்தில் வெளியிடப்படும் என்பதால், அடுத்த கல்வியாண்டிற்கான சேர்க்கை மற்றும் வகுப்புகள் ஜூன் முதல் வாரத்தில் திட்டமிட்டபடி தொடங்கும். 1 முதல் 3-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு புதிய பாடநூல்கள் அறிமுகப்படுத்தப்படுவதால், ஆசிரியர்களுக்கு ஜூன் 1 முதல் 3-ஆம் தேதி வரை சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. இதன் காரணமாக, 1, 2 மற்றும் 3-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் ஜூன் 4-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.

Advertisement