Page Loader
தமிழக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தாயார் மரணம்
தமிழக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தாயார் மரணம்

தமிழக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தாயார் மரணம்

எழுதியவர் Nivetha P
Feb 25, 2023
10:20 am

செய்தி முன்னோட்டம்

தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார்(95). இவர் கடந்த 22ம் தேதி வயது முதுமை காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு தேனியில் உள்ள நட்டாத்தி நாடார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்து வந்துள்ளார்கள். இரு தினங்களுக்கு முன்னர் ஓபிஎஸ் அவர்களும் தனது தாயாரை மருத்துவமனைக்கு சென்று பார்த்துள்ளார். மருத்துவர்களிடம் தனது தாயாரின் உடல்நிலை குறித்து கேட்டறிந்த பின்னர் சென்னைக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் அவரது தாயாரின் உடல்நிலை மிக மோசமானதையடுத்து அவருக்கு செயற்கை ஸ்வாசம் பொருத்தப்பட்டதாக தெரிகிறது. வயது மூப்பு காரணமாக அவரது உடல் சிகிச்சைக்கு ஒத்துழைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

தமிழக முதல்வர் இரங்கல்

தாயாரின் காலை பிடித்து கதறி அழுத ஓபிஎஸ்

இதனால் அவரை வீட்டிற்கு கொண்டுசெல்ல முடிவு செய்த அவருடைய குடும்பத்தினர் செயற்கை சுவாசம் பொருத்தப்பட்ட நிலையில் ஆம்புலன்ஸ் மூலம் பெரியகுளம் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்கள். அங்கு சென்ற சிறிது நேரத்திலேயே பழனியம்மாள் நாச்சியார் உயிர் பிரிந்துள்ளது. தாயாரின் மரணம் ஓபிஎஸ் அவர்களையும், அவரது குடும்பத்தாரையும் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தற்போது பழனியம்மாள் நாச்சியார் உடல் அஞ்சலி செலுத்த அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தகவலறிந்து அங்குசென்ற ஓபிஎஸ் தாயாரின் மரணத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் அவரது கால்களை பிடித்து கண்ணீர்விட்டு கதறியழுதுள்ளார். இதற்கிடையே பழனியம்மாள் நாச்சியாரின் இறுதிச்சடங்கு இன்று(பிப்.,25)அவரது வீட்டில் நடைபெறவுள்ளது. ஓபிஎஸ் தாயார் மரணத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.