தமிழ்நாடு பட்ஜெட் 2026-27: ஆகஸ்ட் 5-ல் சட்டப்பேரவையில் தாக்கல்
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாட்டின் 2026-27ஆம் நிதியாண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி புதன்கிழமை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவை விதி 181(1)-இன் கீழ் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கும் சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர், பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் முழு சட்டப்பேரவை நிகழ்வுகளும் பொதுமக்களுக்காக நேரலை செய்யப்படும் என்று உறுதி அளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஆகஸ்ட் 5, காலை 10:00 மணிக்கு தமிழ்நாடு திருத்திய பொது பட்ஜெட் 2026-27 தாக்கல் செய்யப்படும், தொடர்ந்து மறுநாள், ஆகஸ்ட் 6, காலை 10:00 மணிக்கு தமிழ்நாடு வேளாண் தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
முக்கிய செய்தி 🔔 : 2026 ஆகஸ்ட் 5ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்ற பேரவை கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்கும்,
— Prakash Vijay (@PrakazVijay_Of) July 21, 2026
2026 - 2027 தமிழ்நாடு பட்ஜெட் ஆகஸ்ட் 5ஆம் தேதி தாக்கல் செய்ப்படும் ! pic.twitter.com/dT6B0tg3rr
நேரலை
நேரலை செய்ய ஏற்பாடு
சட்டப்பேரவை நடவடிக்கைகள் அனைத்தும் வெளிப்படைத்தன்மையுடன் மக்களுக்குச் சென்றடையும் வகையில், பட்ஜெட் உரை முழுவதும் தொலைக்காட்சி மற்றும் இணையதளங்களில் நேரலை செய்யத் தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக பேரவைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் முதலமைச்சர் விஜய்யின் தலைமையில் பல்வேறு துறைச் செயலாளர்கள் மற்றும் அமைச்சர்களுடன் பட்ஜெட் குறித்த ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்ற நிலையில், புதிய அரசின் இந்த முழுமையான திருத்திய வரவு-செலவுத் திட்டத்தில் பல்வேறு புதிய நலத்திட்டங்கள் மற்றும் துறை சார்ந்த முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் எனப் பெருமளவில் எதிர்பார்க்கப்படுகிறது.