தமிழகத்தில் மழை; பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று(ஜன 01) இரவு முதல் பெய்து வரும் மழை காரணமாக நாகப்பட்டினத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. தென்மேற்கு வங்கக் கடலில் இருந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல கடலோரப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை இலங்கைக் கரையைக் கடந்தால், 51 ஆண்டுகளுக்கு பின் ஜனவரி மாதத்தில் நிலப்பரப்பை அடைந்த முதல் காற்றழுத்த தாழ்வு நிலையாக இது கருதப்படும். 1971இல் இருந்து 9 காற்றழுத்த தாழ்வுநிலை மட்டுமே ஜனவரியில் பதிவானது. ஆனால், அதில் எதுவுமே புயலாக மாறவில்லை. அதாவது நிலப்பரப்பை அடையவில்லை.
தமிழகத்தின் 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
இந்திய வானிலை ஆய்வு மையம்(IMD) தமிழகத்தின் 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் இதில் அடங்கும். காற்றழுத்த தாழ்வு நிலை தென்மேற்கு திசையில் நகர்ந்து, பிப்ரவரி 3 ஆம் தேதி அதிகாலையில் இலங்கையின் மேற்கு கடற்கரையில் உள்ள கொமோரின் மற்றும் அதை ஒட்டிய மன்னார் வளைகுடாவில் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்(IMD) இன்று, தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்புக்கு(இலங்கை) தென்மேற்கே 90 கிமீ தொலைவிலும், அம்பாந்தோட்டைக்கு(இலங்கை) வடக்கே 120 கிமீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.