ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு: 2026 ரேஷன் கடைகளுக்கான விடுமுறை பட்டியல் வெளியானது
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் 2026 ஆம் ஆண்டுக்கான விடுமுறைப் பட்டியலை உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2026 ஆம் ஆண்டில் மொத்தம் 23 நாட்கள் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ரேஷன் அட்டைதாரர்கள் இந்த விடுமுறைப் பட்டியலைத் தெரிந்துகொண்டு, அதற்கு ஏற்பப் பொருட்களைப் பெறத் திட்டமிட்டுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மொத்தம் 26,618 முழு நேர மற்றும் 10,710 பகுதி நேர ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த விடுமுறைகள் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தில் இடையூறு ஏற்படாமல், விடுமுறை நாட்காட்டியைப் பின்பற்றுவதை உறுதிசெய்யும் நோக்கில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பட்டியல்
விடுமுறை நாட்களின் பட்டியல்
ஜனவரி 1-புத்தாண்டு தினம் ஜனவரி 15-பொங்கல் பண்டிகை ஜனவரி 16-திருவள்ளூர் தினம் ஜனவரி 17-உழவர் தினம் ஜனவரி 26-குடியரசுத் தினம் பிப்ரபரி 1-தை பூசம் மார்ச் 19 -தெலுங்கு புத்தாண்டு மார்ச் 21-ரம்ஜான் பண்டிகை மார்ச் 31-மகாவீர் ஜெயந்தி ஏப்ரல் 3-புனித வெள்ளி ஏப்ரல் 14-தமிழ் புத்தாண்டு மே 1-மே தினம் மே 28-பக்ரீத் பண்டிகை ஜூன் 26-மொஹரம் பண்டிகை ஆகஸ்ட் 15-சுதந்திர தினம் ஆகஸ்ட் 26-மிலாடி நபி செப்டம்பர் 4-கிருஷ்ண ஜெயந்தி செப்டம்பர் 14-விநாயகர் சதுர்த்தி அக்டோபர் 2-காந்தி ஜெயந்தி அக்டோபர் 19-ஆயுத பூஜை அக்டோபர் 20-விஜயதசமி நவம்பர் 8-தீபாவளி பண்டிகை டிசம்பர் 25-கிறிஸ்துமஸ்