பொதுமக்கள் கவனத்திற்கு! நாளை கோவை, தர்மபுரி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மின்தடை
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்வதற்காக மாதாந்திர மின் பராமரிப்பு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் தொடர்ந்து முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, நாளை வியாழக்கிழமை (ஜூன் 4) தமிழகத்தின் பல்வேறு முக்கிய மாவட்டங்களில் உள்ள துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் எனத் தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எனவே, மின்தடை ஏற்படும் வட்டாரங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது அன்றாடத் தேவைகளுக்கான அத்தியாவசிய முன்னேற்பாடுகளை முன்கூட்டியே செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். நாளை காலை முதல் மாலை வரை மின்சாரம் தடைபடவிருக்கும் மாவட்டங்கள், துணை மின் நிலையங்கள் மற்றும் அதற்கு உட்பட்ட பகுதிகளின் பட்டியல் பின்வருமாறு:-
மின்தடை
நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
கோவை மாவட்ட பகுதிகள்: சரவணம்பட்டி துணை மின் நிலையம் (காலை 09:00 - மாலை 05:00): சரவணம்பட்டி, அம்மன் கோவில், சின்னவேடம்பட்டி, கிருஷ்ணாபுரம், சிவானந்தாபுரம், வெள்ளைக்கிணர், உருமண்டம்பாளையம், ஜி.என். மில், சுப்பிரமணியம்பாளையம், கே.என்.ஜி. புதூர், மணியகாரம்பாளையம், லட்சுமி நகர், நாச்சிமுத்து நகர், ஜெயபிரகாஷ் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் (இங்கு மாதாந்திர பராமரிப்புடன் மரக்கிளைகள் வெட்டும் பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன). செங்கத்துறை துணை மின் நிலையம் (காலை 09:00 - மாலை 04:00): செங்கத்துறை, காடம்பாடி, ஏரோ நகர், மதியழகன் நகர்.
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
கன்னியாகுமரி மாவட்ட பகுதிகள் (காலை 09:00 - மதியம் 03:00): கன்னியாகுமரி மாவட்டத்தின் பெரும்பாலான வட்டங்களில் நாளை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி துணை மின் நிலையங்கள்: கன்னியாகுமரி டவுன், கோவளம், சின்னமுட்டம், தென்தாமரைகுளம், சுசீந்திரம், மயிலாடி, அழகப்பபுரம், அகஸ்தீஸ்வரம், அஞ்சுகிராமம், கொட்டாரம், மருங்கூர். எஸ்.ஆர். புதூர் துணை மின் நிலையம்: ஆரல்வாய்மொழி, தேரூர், வெள்ளமடம், தோவாளை, செண்பகராமன்புதூர், லாயம். குழித்துறை துணை மின் நிலையம்: இடைக்கோடு, குழித்துறை, பாலுகல், கலியக்காவிளை, அருமனை, எழுதேசம்.
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
தருமபுரி மாவட்ட பகுதிகள்: மாம்பட்டி துணை மின் நிலையம் (காலை 09:00 - மாலை 05:00): மாம்பட்டி, அனுமன்தீர்த்தம், கைலாயபுரம், காட்டேரி, சாத்தையம்பட்டி, சந்திராபுரம், கீழ்மொரப்பூர், கணபதிபட்டி, கீரைப்பட்டி. தஞ்சாவூர் மாவட்ட பகுதிகள்: வடாசேரி துணை மின் நிலையம் (காலை 09:00 - மதியம் 03:00): வடாசேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமப் பகுதிகள்.
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
திருப்பூர் மாவட்டப் பகுதிகள் (உடுமலைப்பேட்டை வட்டம் - காலை 09:00 - மாலை 04:00): உடுமலைப்பேட்டை துணை மின் நிலையம்: உடுமலை காந்தி நகர், அண்ணா குடியிருப்பு, நேரு வீதி, நகராட்சி அலுவலகப் பகுதி, பூங்கா, இரயில் நிலையம், காவலர் குடியிருப்பு, சந்தைப்பகுதி, எஸ்.வி. புரம், பாலப்பம்பட்டி, மைவாடி, கணமநாயக்கனூர், குரல்குட்டை, மடத்தூர், மலையாண்டிபட்டினம், மருல்பட்டி. நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளை முன்கூட்டியே சேமித்து வைத்து, மின்வாரியத்தின் இந்த அவசரக் காலப் பராமரிப்புப் பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு மின்சார வாரிய வட்டாரங்கள் கேட்டுக் கொண்டுள்ளன.