ரூ1.கோடி வரை கடன்; முன்னாள் ராணுவத்தினருக்கான காக்கும் கரங்கள் திட்டத்தில் விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு
செய்தி முன்னோட்டம்
முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு உதவும் வகையில் காக்கும் கரங்கள் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
கடந்த 2024 சுதந்திர தினத்தன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் இதற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
இந்த திட்டம் சொந்தமாக தொழில் தொடங்க விரும்புவோருக்கு நிதி உதவி மற்றும் பயிற்சி அளிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், முன்னாள் படைவீரர்கள் தொழில் தொடங்குவதற்கு ₹1 கோடி வரை கடன் பெறலாம்.
இந்தத் திட்டத்தின் மூலம் தொடங்கப்படும் வணிகங்களுக்கு அரசாங்கம் 30% மூலதன மானியம் மற்றும் 3% வட்டி மானியம் வழங்கும்.
கூடுதலாக, பயனாளிகள் தங்கள் தொழில் முனைவோர் பயிற்சியையும் பெறுவார்கள். பணியின் போது உயிரிழந்த படைவீரர்களின் குடும்பங்களும் இந்தத் திட்டத்திற்குத் தகுதியுடையவர்கள் ஆவர்.
விண்ணப்பம்
விண்ணப்பிப்பது எப்படி?
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் www.exwel.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது அந்தந்த மாவட்ட முன்னாள் படைவீரர்கள் நல அலுவலகங்களுக்குச் சென்று உதவி பெறலாம்.
55 வயதுக்குட்பட்ட முன்னாள் ராணுவ வீரர்கள், திருமணமாகாத அல்லது முன்னாள் ராணுவ வீரர்களின் விதவை மகள்கள், கடமையில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் விதவை மனைவிகள் இந்த திட்டத்திற்கு தகுதி உடையவர்கள் ஆவர்.
விண்ணப்பதாரர்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை, முன்னாள் ராணுவ வீரருக்கான அடையாள அட்டை, சேவை சான்றிதழ், கல்வி சான்றிதழ்கள் மற்றும் வங்கி பாஸ்புக் உள்ளிட்ட அத்தியாவசிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை ஆன்லைனில் அல்லது நேரில் சமர்ப்பிக்கலாம். திட்டத்திற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி பிப்ரவரி 20, 2025 ஆகும்.
ட்விட்டர் அஞ்சல்
தமிழக அரசின் அறிவிப்பு
முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம்#CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin@mp_saminathan pic.twitter.com/nnQrQNuZQB
— TN DIPR (@TNDIPRNEWS) February 17, 2025