LOADING...
தமிழகத்தில் ஆண்களின் சராசரி  திருமண வயது இவ்ளோவா? ஆய்வில் வெளியான சுவாரஸ்ய தகவல்
தமிழகத்தில் ஆண்களின் சராசரி திருமண வயது

தமிழகத்தில் ஆண்களின் சராசரி  திருமண வயது இவ்ளோவா? ஆய்வில் வெளியான சுவாரஸ்ய தகவல்

எழுதியவர் Sekar Chinnappan
Nov 03, 2025
12:49 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில், ஆண்களின் சராசரி திருமண வயது கடந்த இருபது ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது குறித்து ஐக்கிய நாடுகள் பொருளாதார ஆணையம் மற்றும் தேசியப் புள்ளிவிபர ஆணையங்களின் தரவுகள் சுவாரஸ்யமானத் தகவலை வெளியிட்டுள்ளன. உலகளவில், இந்திய ஆண்கள் சராசரியாக 30 வயதில் திருமணம் செய்து கொள்கின்றனர். இது ஐரோப்பிய நாடுகளின் 35 முதல் 40 வயது சராசரியை விடக் குறைவாகவும், தெற்காசியப் பிராந்தியத்தில் சற்று அதிகமாகவும் உள்ளது. இந்தியாவில் 2000ஆம் ஆண்டில் 25 ஆக இருந்த ஆண்களின் சராசரி திருமண வயது, தற்போது 30 ஆக உயர்ந்துள்ளது. இதற்கு முக்கியக் காரணங்களாக உயர்கல்வி, தொழில் வளர்ச்சி, நகர்ப்புறமயமாக்கல், பெண்களின் வேலைவாய்ப்பு உயர்வு மற்றும் சமூகப் பார்வை மாற்றம் ஆகியவை குறிப்பிடப்படுகின்றன.

நகரங்கள்

நகரங்கள் மற்றும் கிராமப்புறங்கள் ஒப்பீடு

பெருநகரங்களில் (சென்னை, மும்பை போன்றவை) ஆண்கள் பெரும்பாலும் 31 முதல் 33 வயதிற்குள் திருமணம் செய்து கொள்ளும் நிலையில், கிராமப்புறங்களில் இது 27-28 வயதிலேயே நடைபெறுகிறது. தற்கால இளைஞர்கள், குறிப்பாக ஐடி துறையில் பணிபுரிபவர்கள், பொருளாதார ரீதியாகவும் மனரீதியாகவும் நிலைபெற்ற பிறகே திருமணம் பற்றி முடிவெடுக்கின்றனர். சமூகவியல் வல்லுநர்களின் கூற்றுப்படி, அடுத்த 10 ஆண்டுகளில் இந்திய ஆண்களின் சராசரி திருமண வயது 32-33 ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதற்கு, இளம் தலைமுறையினர் தனிப்பட்ட வாழ்க்கை, வேலை மற்றும் பொருளாதார நிலை ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதே காரணம். இதன் மூலம், திருமணம் என்பது ஒரு குடும்பக் கடமை என்பதைத் தாண்டி, ஒரு தனிப்பட்ட முடிவாக மாறி வருவதைக் காண முடிகிறது.