உள்ளாட்சித் தேர்தல் மீண்டும் தள்ளிவைப்பு? ஊராட்சிகளை கவனிக்க BDO மற்றும் அதிகாரிகள் நியமனம்
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், அடுத்த 6 மாத காலத்திற்கு நிர்வாக பணிகளை மேற்கொள்ள தனி அலுவலர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் முதன்மைச் செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் இதற்கான அரசாணையை பிறப்பித்துள்ளார். வரும் 20.10.2026 முதல் 19.04.2027 வரை, கிராம ஊராட்சிகளை சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலரும், ஊராட்சி ஒன்றியங்களை உதவி இயக்குநர்/ ஊராட்சி ஒன்றிய தணிக்கை உதவி இயக்குநரும், மாவட்ட ஊராட்சிகளை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் / கூடுதல் ஆட்சியரும் கவனிப்பார்கள்.
உள்ளாட்சித் தேர்தல்
உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப்போவது ஏன்?
46 கிராம ஊராட்சிகள் நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுடன் இணைக்கப்பட்டுள்ளன.
புதிதாக 93 கிராம ஊராட்சிகளும், 9 ஊராட்சி ஒன்றியங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக ஊராட்சி வார்டுகளை மறுசீரமைப்பு (Delimitation) செய்யவும், இடஒதுக்கீடுகளை மாற்றியமைக்கவும் வேண்டியுள்ளது.
இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994, பிரிவு 261-A-ன் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலமும் முடிவடைய உள்ளதால், அனைத்து அமைப்புகளுக்கும் ஒட்டுமொத்தமாகச் சேர்த்துத் தேர்தலை நடத்த அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Tenure of Rural Local Body Administrators Extended by Six More Months pic.twitter.com/Ez25K6LSsB
— Vignesh Theni (@Vignesh_twitz) October 21, 2026