2029 பிரதமர் ரேஸில் 3-வது இடம் பிடித்த தமிழக முதல்வர் விஜய்: கருத்துக் கணிப்பில் ஆச்சரியத் தகவல்
செய்தி முன்னோட்டம்
தமிழக முதல்வராக பொறுப்பேற்று 100 நாட்களை நிறைவு செய்துள்ள தமிழக வெற்றி கழக தலைவரும், நடிகருமான சி. ஜோசப் விஜய், 2029 மக்களவை தேர்தலுக்கான இந்திய பிரதமர் வேட்பாளர்கள் பட்டியலில் 3-வது இடத்தை பிடித்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளார். இந்தியா டுடே - சி-வோட்டர் இணைந்து நடத்திய ஆகஸ்ட் 2026-க்கான 'மூட் ஆஃப் தி நேஷன்' (MOTN) கருத்துக் கணிப்பில் இந்த ஆச்சரியத் தகவல் வெளியாகியுள்ளது. 2024-ஆம் ஆண்டுதான் தீவிர அரசியலில் காலடி எடுத்து வைத்த விஜய், குறுகிய காலத்தில் தேசியத் தலைவர்களுக்கு இணையான ஆதரவைப் பெற்றுள்ளார்.
பட்டியல்
2029 பிரதமர் விருப்பப் பட்டியல்
கருத்துக்கணிப்பின்படி, தற்போதைய அரசிய சூழலில், 2029 பிரதமர் வேட்பாளராக, நரேந்திர மோடிக்கு ஆதரவாக 48.7%, எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்திக்கு ஆதரவாக 27.1% வாக்களித்துள்ளனர்.
சுவாரசியமாக, ஜோசப் விஜய்க்கு ஆதரவாக 9.2% மக்கள் வாக்களித்துள்ளனர்.
அடுத்த இடத்தில் 1% வாக்குகளுடன் அபிஜித் திப்கே மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால்(1%) வாக்குகளை பெற்றுள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைமை
தேசிய அளவில் எதிர்க்கட்சித் தலைமை ரேஸ்
பிரதமர் வேட்பாளர் விருப்பத்தை தாண்டி, தேசிய அளவில் எதிர்க்கட்சி கூட்டணியை வழிநடத்த மிகவும் தகுதியானவர் யார் என்ற கேள்விக்கு, ராகுல் காந்தி 29.0% வாக்குகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
முதல்வர் விஜய் 12.2% வாக்குகளைப் பெற்று, மமதா பானர்ஜி (8.5%), அரவிந்த் கெஜ்ரிவால் (7.5%), அகிலேஷ் யாதவ் (6.9%) ஆகியோரை பின்னுக்குத் தள்ளி 2-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
CM @TVKVijayHQ makes his entry into the national Mood Of the Nation survey by @IndiaToday pic.twitter.com/JhuKr9QAr8
— Akshita Nandagopal (@Akshita_N) August 27, 2026