LOADING...
வெளியாகிறது 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்! முதன்முறையாக வாட்ஸ்அப் மூலம் ரிசல்ட்
இன்று காலை 9.30 மணி அளவில் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின்றன

வெளியாகிறது 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்! முதன்முறையாக வாட்ஸ்அப் மூலம் ரிசல்ட்

எழுதியவர் Venkatalakshmi V
May 08, 2026
09:16 am

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணி அளவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகின்றன. சுமார் 8 லட்சம் மாணவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த இந்த முடிவுகள், மாநிலத்தின் தற்போதைய அரசியல் சூழலுக்கு மத்தியிலும் திட்டமிட்டபடி வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தேர்வு முடிவுகளைக் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளங்கள் வாயிலாகத் தெரிந்துகொள்ளலாம்: www.tnresults.nic.in www.dge.tn.gov.in மாணவர்கள் தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியைக் குறிப்பிட்டு மதிப்பெண் பட்டியலைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அடுத்து வரவிருக்கும் 10-ஆம் வகுப்பு முடிவுகளும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ்அப்

வாட்ஸ்அப் மூலம் புதிய வசதி

இந்த ஆண்டு முதன்முறையாக, தமிழக மின் ஆளுமை முகமையின் (TNeGA) ஒத்துழைப்புடன் வாட்ஸ்அப் மூலம் தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் 7845252525 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப்பில் "Hi" என்று குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலம், தங்களின் முடிவுகளை மிக எளிதாக அலைபேசியிலேயே பெற்றுவிட முடியும். இணையதளங்கள் தவிர்த்து, மாணவர்கள் பதிவு செய்துள்ள அலைபேசி எண்களுக்குக் SMS மூலமாகவும் முடிவுகள் அனுப்பப்படவுள்ளன. மேலும், மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை நடைபெற்ற இந்தத் தேர்வில் சுமார் 8 லட்சம் மாணவ, மாணவிகள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement