
இந்தாண்டில் அதிகபட்சமாக ஒரேநாளில் ரூ.31,748க்கு ஸ்விகி ஆர்டர் செய்த சென்னை நபர்
செய்தி முன்னோட்டம்
பிரபல ஆன்லைன் உணவு விநியோக நிறுவனமான ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில், 2023ன் ட்ரெண்டிங் அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
அதன்படி இந்த அறிக்கையில், சென்னை மாவட்டத்தை சேர்ந்த நபர் ஒருவர் ஒரே நாளில் நாச்சோஸ், ஜூஸ், சிப்ஸ், காபி உள்ளிட்ட பொருட்களை ரூ.31,748-க்கு ஆர்டர் செய்துள்ளார்.
இவரது பெயர் ஒரேநாளில் மிகப்பெரிய ஆர்டர் செய்தவர் என்று குறிப்பிட்டு இடம்பெற்றுள்ளது.
இவரையடுத்து ஜெய்பூரை சேர்ந்த நபர் ஒருவர் ஒரேநாளில் 67 ஆர்டர் செய்துள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் 2023ல் ஆணுறைகள் அதிகம் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.
செப்டம்பரில் அதிகளவு ஆணுறைகள் ஆர்டர் செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில், கடந்த ஆகஸ்ட் 12ம் தேதியன்று ஒரே நாளில் மட்டும் 5,893 யூனிட் ஆணுறைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
ஸ்விகி
ஆரோக்கியமான ஸ்னேக்ஸ் வகைகளில் மக்கானா முதலிடத்தினை பிடித்துள்ளது
அதற்கு அடுத்த இடத்தில் வெங்காயம், தக்காளி கொத்தமல்லி உள்ளிட்ட பொருட்கள் அதிகளவில் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் வாழைப்பழங்கள், சிப்ஸ் வகைகள் உள்ளிட்டவை அதற்கடுத்த இடத்தினை பிடித்துள்ளது.
இதனை தொடர்ந்து, ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்'ல் இந்தாண்டு ஆரோக்கியமான ஸ்னேக்ஸ் வகைகளில் மக்கானா முதலிடத்தினை பிடித்துள்ளது.
2023ல் மட்டும் 1.3 மில்லியனுக்கும் மேலான மக்கானா ஆர்டர் செய்யப்பட்டுள்ளது என்று தெரிகிறது.
இது ஒரு ஆரோக்கியமான உணவு மாற்றத்தினை குறிக்கிறது.
மாம்பழங்கள் இந்தாண்டு இந்தியளவில் பெங்களூர் பகுதிகளில் அதிகளவு ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் மே.21ம் தேதி மட்டும் 36 டன் மாம்பழங்கள் ஆர்டர் செய்யப்பட்டது.
இந்த அறிக்கையினையடுத்து ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் இந்தியாவின் முதன்மையான மற்றும் விரைவான வணிக மளிகை சேவையாக கருதப்படுகிறது.
ட்விட்டர் அஞ்சல்
ஸ்விகி இன்ஸ்ட்டாமார்ட்
2023ல் ஸ்விகி இன்ஸ்டாமார்ட்டில் அதிகம் வாங்கப்பட்ட பொருட்கள்!#SunNews | #SwiggyInstamart pic.twitter.com/DuYi4G4ouB
— Sun News (@sunnewstamil) December 20, 2023