NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஸ்வாதி மாலிவால் சர்ச்சை: அரவிந்த் கெஜ்ரிவாலின் 'நோய்வாய்ப்பட்ட, வயதான' பெற்றோரை விசாரிக்க போவதாக தகவல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஸ்வாதி மாலிவால் சர்ச்சை: அரவிந்த் கெஜ்ரிவாலின் 'நோய்வாய்ப்பட்ட, வயதான' பெற்றோரை விசாரிக்க போவதாக தகவல்
    அரவிந்த் கெஜ்ரிவாலின் பெற்றோரைத் தவிர, அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவாலிடமும் போலீசார் விசாரிக்கபோவதாக தகவல்

    ஸ்வாதி மாலிவால் சர்ச்சை: அரவிந்த் கெஜ்ரிவாலின் 'நோய்வாய்ப்பட்ட, வயதான' பெற்றோரை விசாரிக்க போவதாக தகவல்

    எழுதியவர் Venkatalakshmi V
    May 23, 2024
    10:19 am

    செய்தி முன்னோட்டம்

    ஆம் ஆத்மி எம்பி ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது வயதான மற்றும் நோய்வாய்ப்பட்ட பெற்றோரிடம் வியாழக்கிழமை காவல்துறையினர் விசாரணை நடத்தவிருப்பதாக தெரிவித்துள்ளார்.

    புதன்கிழமை எக்ஸ்-இல் ஒரு இடுகையில், அரவிந்த் கெஜ்ரிவால்,"நாளை டெல்லி போலீசார் எனது வயதான மற்றும் நோய்வாய்ப்பட்ட பெற்றோரை விசாரிக்க வருவார்கள்." என பதிவிட்டிருந்தார்.

    முதல்வர் இல்லத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் தன்னை தாக்கியதாக குற்றம் சாட்டிய ஸ்வாதி மாலிவால், அவர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.

    பிபவ் குமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு, அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டில் வைத்து பிபவ் குமார் கைது செய்யப்பட்டார்.

    விசாரணை

    'மனைவியும் விசாரிக்கப்படலாம்': கெஜ்ரிவால்

    அரவிந்த் கெஜ்ரிவாலின் பெற்றோரைத் தவிர, அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவாலிடமும் போலீசார் விசாரிக்கலாம் என்று கூறப்படுகிறது.

    மாஜிஸ்திரேட் முன் அளித்த வாக்குமூலத்தில், தாக்கப்பட்டதாகக் கூறப்படும் நேரத்தில் கெஜ்ரிவாலின் மனைவி மற்றும் பெற்றோர் உடனிருந்தனர் என்று ஸ்வாதி மாலிவால் கூறினார்.

    "அவர் அவர்களைச் சந்தித்துவிட்டு வெளியே வந்தார். அதனால்தான் அவர்களின் வாக்குமூலத்தை எடுக்க இரண்டு நாட்கள் அவகாசம் கேட்கிறோம்" என்று டெல்லி காவல்துறை கூறியதாக ஏஎன்ஐ தெரிவித்துள்ளது.

    புதன்கிழமையன்று இந்த வழக்கு தொடர்பாக தனது மௌனத்தை உடைத்த கெஜ்ரிவால், சம்பவத்தின் இரண்டு பதிப்புகள் வெளிவந்துள்ளதால், நியாயமான விசாரணையை விரும்புவதாகக் கூறினார்.இந்த தாக்குதல் தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவாலின் ஐந்து நாள் போலீஸ் காவலில் உள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அரவிந்த் கெஜ்ரிவால்
    டெல்லி
    ஆம் ஆத்மி

    சமீபத்திய

    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு
    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ

    அரவிந்த் கெஜ்ரிவால்

    "மதுபான ஊழல் என்று அழைக்கப்படும் வழக்கில் பணம் எங்குள்ளது என்பதை அவரே வெளிப்படுத்துவார்": அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி மதுபானம்
    கெஜ்ரிவால் கைது விவாகரத்தில் தூதரக அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பியதை அடுத்து அமெரிக்கா ரியாக்ஷன் டெல்லி
    "ED என்னை எவ்வளவு காலம் வேண்டுமானாலும் வைத்திருக்க முடியும். இது ஒரு மோசடி": நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி
    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் காவல், ஏப்ரல் 1 வரை நீட்டிப்பு டெல்லி

    டெல்லி

    டெல்லி முதல்வரின் தனிச் செயலாளர் பதவியில் இருந்த பிபவ் குமாரை நீக்கியது விஜிலென்ஸ் துறை  அரவிந்த் கெஜ்ரிவால்
    நேஷனல் ஹெரால்டின் ரூ.752 கோடி சொத்துக்கள் மீது ஊழல் தடுப்பு அமைப்பு நடவடிக்கை  இந்தியா
    மதுபானக் கொள்கை வழக்கில் பிஆர்எஸ் தலைவர் கே.கவிதா சிபிஐயால் கைது  தெலுங்கானா
    அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு எதிரான மனு: இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவால்

    ஆம் ஆத்மி

    7 ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை பணம் கொடுத்து பாஜக வாங்க முயன்றதாக குற்றச்சாட்டு  அரவிந்த் கெஜ்ரிவால்
    சண்டிகர் மேயர் தேர்தலில் 'இண்டியா' கூட்டணிக்கு எதிரான முதல் தேர்தல் போரில் பாஜக வெற்றி  சண்டிகர்
    அமலாக்க இயக்குநரகத்தின் புகாரை அடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியது டெல்லி நீதிமன்றம்  டெல்லி
    மதுபான கொள்கை வழக்கு: டெல்லி நீதிமன்றத்திற்கு முன் ஆன்லைனில் ஆஜரானார் அரவிந்த் கெஜ்ரிவால்  டெல்லி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025