சென்னையில் ஆட்டோ ஓட்டுனர்கள் இன்று வேலை நிறுத்தம்; ஏன்?
செய்தி முன்னோட்டம்
சென்னையில் இன்று ஆட்டோ தொழிலாளர்கள் மீட்டர் கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பல தொழிலாளர் சங்கங்கள் சார்பில் வேலை நிறுத்தம் நடத்தப்படவுள்ளது.
சென்னை நகரில் இயங்கும் சுமார் 1 லட்சம் ஆட்டோக்களில் 60 சதவீதம் ஆட்டோக்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆர்ப்பாட்டங்கள் ஆட்சியர் அலுவலகம் மற்றும் ராஜரத்தினம் அரங்கம் போன்ற இடங்களில் நடைபெறவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
காரணம்
மீட்டர் கட்டணம், ஆட்டோ செயலி உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம்
இது தொடர்பாக தொழிற்சங்க நிர்வாகிகள், "2013-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆட்டோவுக்கான மீட்டர் கட்டணம் மாற்றியமைக்கப்படவில்லை. இது தொடர்பான கோப்பு முதல்வர் மேஜையில் இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். வாடகை வாகனங்களுக்கான கார்ப்பரேட் நிறுவனங்கள் சட்டவிரோதமாக 1.8 கி.மீ.க்கு ரூ.76 வசூலிக்கின்றன. அத்தகைய நிறுவனங்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க மறுக்கிறது. ரூ.100-க்கு ரூ.30 வரை கமிஷன் எடுக்கின்றன. எனவே, ஆட்டோக்களுக்கான செயலியை அரசே தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். இதுவும் நிலுவையில் இருக்கிறது".
இது போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தை துவங்கியுள்ளனர் ஆட்டோ ஓட்டுனர்கள்.