NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'தி கேரளா ஸ்டோரி' படத்திற்கு எதிரான மனுக்களை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    'தி கேரளா ஸ்டோரி' படத்திற்கு எதிரான மனுக்களை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு 
    மனுதாரர் முதலில் உயர் நீதிமன்றத்தை தான் அணுக வேண்டும் என்று நீதிபதி நாகரத்னா கூறினார்.

    'தி கேரளா ஸ்டோரி' படத்திற்கு எதிரான மனுக்களை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு 

    எழுதியவர் Sindhuja SM
    May 02, 2023
    03:25 pm

    செய்தி முன்னோட்டம்

    "தி கேரளா ஸ்டோரி" திரைப்படத்தின் வெளியீட்டைத் தடை செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளது.

    32 ஆயிரம் கேரள பெண்கள், லவ் ஜிகாத்தின் மூலம் மதமாற்றம் செய்யப்பட்டு, தீவிரவாதத்தில் சேர்க்கப்பட்டதாக "தி கேரளா ஸ்டோரி" திரைப்படத்தின் ட்ரைலர் கூறுகிறது.

    இந்த படம் ஒரு மதத்தினர் மீது வெறுப்புணர்வை தூண்டுவது போல் இருக்கிறது என்றும் பிரச்சாரத்திற்காக இப்படி ஒரு படம் தயாரிக்கப்பட்டிருக்கிறது என்றும் கூறிய மனுதாரர்கள், இந்த படத்தை தடை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

    details

    'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாக இருக்கிறது 

    இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் கே.எம்.ஜோசப் மற்றும் பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு, "வெறுப்புப் பேச்சுகளில் பலவகைகள் உள்ளன. இந்த படத்திற்கு சான்றிதழ் கிடைத்திருக்கிறது. வாரியத்தின் அனுமதியையும் இந்த திரைப்படம் பெற்றுள்ளது. நீங்கள் திரைப்படத்தின் வெளியீட்டை தடை செய்ய விரும்பினால், சான்றிதழை வழங்கிய பொருத்தமான வாரியத்திடம் நீங்கள் இது குறித்து பேச வேண்டும்." என்று கூறி மனுதாரர்களின் மனுக்களை ஏற்க மறுத்தது.

    மேலும், மனுதாரர் முதலில் உயர் நீதிமன்றத்தை தான் அணுக வேண்டும் என்று நீதிபதி நாகரத்னா கூறினார்.

    ஆனால், இந்த திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட இருப்பதால் அதற்கு தேவையான நேரமில்லை என்று மனுதாரர் சார்பில் பேசிய வழக்கறிஞர் நிஜாம் பாஷா தெரிவித்திருக்கிறார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    கேரளா
    உச்ச நீதிமன்றம்

    சமீபத்திய

    பெங்களூர் கூட்ட நெரிசலுக்கு பொறுப்பு ஏற்று கர்நாடக கிரிக்கெட் சங்க செயலாளர் மற்றும் பொருளாளர் ராஜினாமா கிரிக்கெட்
    ₹300 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள்; மாநிலங்களவை தேர்தலுக்கான பிரமாண பத்திரத்தில் கமல்ஹாசன் தகவல் கமல்ஹாசன்
    ஒரே நாளில் ₹1,200 சரிந்த தங்கம் விலை; இன்றைய (ஜூன் 7) விலை நிலவரம் தங்கம் வெள்ளி விலை
    கடல் நீரில் கரையும் நச்சுத்தன்மையற்ற பிளாஸ்டிக் உருவாக்கம்; ஜப்பான் விஞ்ஞானிகள் சாதனை ஆராய்ச்சி

    இந்தியா

    உத்தரபிரதேசத்தில் 91.43% மதிப்பெண் எடுத்தும் தேர்ச்சி பெறாத 10ம் வகுப்பு மாணவி  உத்தரப்பிரதேசம்
    ட்விட்டர் பதிவுகளை நீக்க கோரும் டாப் 5 நாடுகளின் பட்டியலில் இந்தியா! ட்விட்டர்
    சத்தீஸ்கர் தாக்குதல்: உயிரிழந்த 10ல் 5 போலீஸார் மாவோயிஸ்டுகளாக இருந்தவர்கள்  காவல்துறை
    மணிப்பூரில் வன்முறை: கூட்டங்களுக்கும் இணையாளத்திற்கும் தடை விதிக்கப்பட்டது  இந்தியா

    கேரளா

    மகள்களுக்கு சொத்துரிமை இல்லாததால் மீண்டும் திருமணம் செய்து கொண்ட இஸ்லாமிய தம்பதியர் இந்தியா
    கேரள மக்களை பாதுகாக்கவே பாப்புலர் பிரண்ட்'க்கு மத்திய அரசு தடை விதித்தது - அமித்ஷா அமித்ஷா
    உடல் உறுப்பு தானங்களில் முதல் இடத்தில் இருக்கும் கேரளா இந்தியா
    வாகனங்களை நிறுத்தி குழந்தைகளுக்கு சாக்லேட் வழங்கிய குடியரசு தலைவர் முர்மு இந்தியா

    உச்ச நீதிமன்றம்

    தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைக்க இன்றே கடைசி நாள் தமிழ்நாடு
    ராஜீவ் காந்தி கொலை வழக்கு - விடுதலையானார் நாடு திரும்புவதில் சிக்கல் இந்தியா
    ஹிண்டன்பர்க் அறிக்கை விவகாரம்: ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் புதிய விசாரணை கமிட்டி பிரேக்கிங் நியூஸ்
    தேர்தல் ஆணையர் நியமனத்தில் புது நடைமுறை - உச்சநீதிமன்றம் தேர்தல் ஆணையம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025