இந்த ஆண்டு பெங்களூரை அளவுக்கதிகமாக வெப்பம் தாக்கும்: வானிலை ஆய்வு மையம்
செய்தி முன்னோட்டம்
பொதுவாகவே ஆண்டு முழுவதும் இனிமையான வானிலை நிலவும் பெங்களூரு நகரம் இந்த ஆண்டு வெப்பநிலையைப் பொறுத்தவரை தேசிய தலைநகர் டெல்லியை விட அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது.
அதுமட்டுமின்றி, வரும் வாரங்களில் பெங்களூரு வெப்பமான நாட்களை அனுபவிக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வரை, பெங்களுருவில் வெப்பநிலை 2.7 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது. பிப்ரவரி 17, 2025 அன்று பெங்களூருவில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பமான நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது, அங்கு 35.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
மறுபுறம், டெல்லியில் 29 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
கோடை
மாறும் பெங்களூருவின் வானிலை
பெங்களுருவில் பகல் நேரங்கள் வெப்பமாக இருக்கும் அதே வேளையில், மாலை நேரங்களில் குளிர்ச்சியாக இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
குறைந்தபட்சம் 17 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கும்.
பெங்களூருவில் கோடை மார்ச் முதல் வாரத்தில் தொடங்கும், ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தின் நடுப்பகுதியில் சீக்கிரமாக தொடங்கும் என்று IMD கூறுகிறது.
வடக்கு காற்று வீசாததே இந்த மாற்றத்திற்கு காரணம் என்று ஐஎம்டி தெரிவித்துள்ளது.
கூடுதலாக, நடந்து வரும் லா நினா நிகழ்வு பெங்களூருவின் வானிலையை பாதிக்கக்கூடும் என்று வானிலை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டினர்.
வரும் நாட்களில் வெப்பநிலை தொடர்ந்து அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், பெங்களூரு கோடைகாலத்திற்கு முன்கூட்டியே மாறுவது ஒரு வளர்ந்து வரும் காலநிலை மாற்றமாக பாரக்கப்படுகிறது.