LOADING...
சென்னை தி.நகரில் 10 அடி ஆழத்தில் திடீர் பள்ளம் 
சென்னை தி.நகரில் 10 அடி ஆழத்தில் திடீர் பள்ளம்

சென்னை தி.நகரில் 10 அடி ஆழத்தில் திடீர் பள்ளம் 

எழுதியவர் Nivetha P
Sep 28, 2023
12:30 pm

செய்தி முன்னோட்டம்

சென்னை தியாகராய நகரில் இன்று(செப்.,28)அதிகாலை 3 மணியளவில் 3 அடி அகலம், 10 அடி ஆழம் கொண்ட பெரிய பள்ளம் ஒன்று விழுந்துள்ளது. இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல்ளித்துள்ளனர். அதன்பேரில் அங்கு விரைந்து வந்த காவல்துறை, பள்ளத்தை சுற்றி தடுப்புகளை அமைத்து அச்சாலையில் இருசக்கர வாகனம் மற்றும் கார்களுக்கு மட்டும் அனுமதியளித்து ஒருவழி சாலையாக மாற்றியுள்ளனர். பின்னர், சென்னை மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி அங்கு வந்த அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் கொண்டு பள்ளத்தினை சரி செய்யும் பணியினை மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது. மேலும் இதுகுறித்த முதற்கட்ட தகவல்படி, அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் கழிவுநீர் கால்வாய் பணியால் இந்த பள்ளமானது ஏற்பட்டிருக்க கூடும் என்று கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

சென்னையில் திடீர் பள்ளம்