சென்னையில் திடீரென தீ பிடித்து எரிந்த பிரபல கல்லூரியின் பேருந்து
காஞ்சிபுரம், ஸ்ரீபெரம்பத்தூர் பகுதியில் இயங்கி வருகிறது ஸ்ரீ ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி. இந்த ராஜலட்சுமி பொறியியல் கல்லூரியில் இருந்து தக்கோலம் பகுதியினை நோக்கி சென்ற கல்லூரி பேருந்து ஒன்று மப்பேடு அருகே செல்கையில் எஞ்சின் பகுதியில் இருந்து புகை வந்ததாக தெரிகிறது, இதனால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அந்த பேருந்தில் தீயானது பற்றி எரிய துவங்கியுள்ளது. இதனை கண்ட கல்லூரி மாணவர்கள் பேருந்தின் உள்ளே இருந்து வெளியே குதித்து ஓடியுள்ளனர். இதில் நல்ல விஷயம் என்னவென்றால், இப்பேருந்தில் பயணித்த ஓட்டுநர் உள்பட 14 பேரும் உயிர் தப்பியுள்ளனர் என்பது ஆகும். பின்னர் இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர்கள் அங்கு வந்து தீயினை அணைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.