மாணவர்களே, பெற்றோர்களே அலெர்ட்; இதையெல்லாம் தெரியாம வெளிநாட்டுக்கு படிக்க போகாதீங்க!
செய்தி முன்னோட்டம்
2026 ஆம் கல்வியாண்டில் தங்கள் பிள்ளைகளை வெளிநாட்டிற்கு மேற்படிப்பிற்கு அனுப்பத் திட்டமிடும் இந்தியப் பெற்றோர்களின் முன்னுரிமைகள் தற்போது மாறியுள்ளன. வெறும் பல்கலைக்கழகத் தரவரிசைகளை மட்டும் நம்பியிருக்காமல், வேலைவாய்ப்பு மற்றும் முதலீட்டிற்கான பலன் ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அதிகரித்து வரும் கல்விச் செலவு மற்றும் மாறிவரும் விசா கொள்கைகளுக்கு மத்தியில், பெற்றோர்கள் கேட்க வேண்டிய ஐந்து கேள்விகளை கல்வி நிபுணர்கள் பட்டியலிட்டுள்ளனர்.
வேலைவாய்ப்பு
வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரத் திட்டமிடல்
முதாவதாக, ஒரு பட்டம் மட்டும் வேலைக்கு உத்தரவாதம் தராது என்பதால், அந்தப் பல்கலைக்கழகத்தின் வேலைவாய்ப்பு புள்ளிவிவரங்கள் மற்றும் முன்னாள் மாணவர்களின் தற்போதைய நிலையை ஆராய வேண்டும். இரண்டாவதாக, பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் மற்றும் அது வழங்கும் படிப்பிற்குத் தொழில்துறையில் உள்ள மதிப்பு மிக முக்கியமானது. மூன்றாவதாக, கல்விக் கட்டணம் மட்டுமின்றி, அந்த நகரத்தின் வாழ்க்கைச் செலவு, காப்பீடு மற்றும் நாணய மதிப்பின் ஏற்ற இறக்கங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய மொத்தச் செலவைத் துல்லியமாகத் திட்டமிட வேண்டும்.
பாதுகாப்பு
பாதுகாப்பு மற்றும் நடைமுறை அனுபவம்
நான்காவதாக, வளாகத்தின் பாதுகாப்பு மற்றும் சர்வதேச மாணவர்களுக்கான மனநல ஆதரவு அமைப்புகளை உறுதி செய்ய வேண்டும். இறுதியாக, வெறும் ஏட்டுக் கல்வியைத் தாண்டி, இன்டர்ன்ஷிப் (Internships) மற்றும் நேரடித் திட்டப் பணிகள் (Industry Projects) மூலம் மாணவர்களுக்குக் கிடைக்கும் நடைமுறை அனுபவத்தைப் பெற்றோர்கள் கவனிக்க வேண்டும். இப்போதைய சூழலில் தொழில்நுட்பத் திறன்களுடன், சிக்கல்களைத் தீர்க்கும் திறன் மற்றும் தகவல் தொடர்புத் திறன் கொண்ட மாணவர்களையே உலகளாவிய நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன என்பதை உணர்ந்து பல்கலைக்கழகத்தைத் தேர்வு செய்வது அவசியமாகும்.