அமெரிக்காவில் கண்டெடுக்கப்பட்ட 7ம் நூற்றாண்டினை சேர்ந்த முருகன் சிலை
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு சிலைகடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் அண்மைக்காலமாக காணாமல்போன தமிழக சிலைகளை கண்டுபிடித்து அதனை மீட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கள்ளக்குறிச்சியிலிருந்து பெரியசாமி உடையார் என்பவர் சிலைகடத்தல் தடுப்புப்பிரிவு போலீசாரிடன் ஒரு புகாரளித்துள்ளார்.
அதில், கள்ளக்குறிச்சி-தச்சூர் கிராமத்திலுள்ள 7ம் நூற்றாண்டினை சேர்ந்த சிவன் கோயிலில், 13 பழங்கால சாமிச்சிலைகள் இருந்தது.
ஆனால், அந்த சிலைகளுள் ஒன்றான முருகன் சிலை, 2000ம்ஆண்டில் திருடப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர், தனது புகாரோடு தனியார் பத்திரிக்கையில் இருந்த முருகன் சிலை போட்டோ ஒன்றினையும் ஆதாரமாக கொடுத்துள்ளார்.
தொடர்ந்து, சிலைகடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் சில மாதங்களுக்கு முன்னர் உளுந்தூர்பேட்டை ஆதிகேசவ கோயிலில் இருந்த சிலைகளை கண்டுபிடித்து அதனை கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்ததை கண்ட பின்னரே, தான் இந்த புகாரினை அளிப்பதாகவும் கூறியுள்ளார்.
சிலை
அமெரிக்கா ஹோம் லான்ச் செக்யூரிட்டி வசம் இருந்த முருகர் சிலை
இதனையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், பத்திரிக்கையில் வெளியான அந்த முருகன் சிலையினை அடிப்படையாக கொண்டு காணாமல் போன 7ம் நூற்றாண்டினை சேர்ந்த முருகன் சிலையினை தேடி வந்துள்ளனர்.
ஏற்கனவே கண்டெடுக்கப்பட்டுள்ள தமிழக சிலைகள் உள்ள இடத்தில் இந்த சிலை உள்ளதா? என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.
அந்த வகையில், இணையத்தில் தேடுகையில், காவல்துறை தேடும் சிலையானது அமெரிக்கா நாட்டில் உள்ள ஹோம் லான்ச் செக்யூரிட்டி வசம் இருப்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து தற்போது இருநாட்டின் இடையேயுள்ள பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தத்தின் மூலம் சிலையினை தமிழகம் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.