ஸ்டெர்லைட் விவகாரம் - தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
செய்தி முன்னோட்டம்
தூத்துக்குடி மாவட்டத்தின் ஸ்டெர்லைட் ஆலையினை மூடவேண்டும் என்று கடந்த 2018ம்ஆண்டு நடந்தது.
அப்போது மே 22ம்தேதி ஆட்சியர் அலுவலகத்தினை முற்றுகையிடும் போராட்டமானது நடத்தப்பட்டது.
அதில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13பேர் கொல்லப்பட்டனர்.
இதனையடுத்து ஏற்பட்ட பதற்றத்தினை தொடர்ந்து ஸ்டர்லைட்ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.
இதனையடுத்து தமிழக அரசின் உத்தரவுக்கு எதிர்ப்புத்தெரிவித்து வேதாந்த குழுமம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
இதுகுறித்த விசாரணைகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் நிலையில், ஆலையில் பராமரிப்புப்பணிகளை மேற்கொள்ள அனுமதிக்கோரி வேதாந்த குழுமம் இடையீட்டு மனுவினை தாக்கல்செய்தது.
இதுகுறித்த விசாரணை நடந்ததையடுத்து ஆலையிலிருந்து ஜிப்சம் அகற்றுதல், கசிவுநீர் பம்பிங் வேலைகள் ஆகியவற்றிற்கு தமிழ்நாடுஅரசு அனுமதித்த அவசியமான சில பராமரிப்பு வேலைகளை அரசாங்க மேற்பார்வையில் நிபந்தனைகளுக்கு உட்பட்டு மேற்கொள்ள உச்சநீதிமன்றம் கடந்த மாதம்10ம்தேதி அனுமதியளித்தது.
ஆலை
தமிழக அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் வேதாந்த குழுமம்
அதனைத்தொடர்ந்து, இதர அம்சங்கள் குறித்து தமிழ்நாடுஅரசு சீர்தூக்கிப்பார்த்து தமது கருத்தினை மே மாதம் 4ம்தேதி கூறவேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.
அதன்படி இதுகுறித்த விசாரணை நேற்று நடந்தது.
அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த வழக்குக்குறித்து பதில் மனுத்தாக்கல் செய்ய 4 வார காலஅவகாசம் வேண்டும் என்று கோரினார்.
இதற்கு வேதாந்தக்குழுமம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆட்சேபனம் தெரிவித்தார்.
மேலும் அவர், உச்ச நீதிமன்றம் அனுமதித்த பராமரிப்புப்பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு ஒப்புதலுக்காக காத்துக்கொண்டிருக்கிறோம்.
இதுகுறித்து தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கவேண்டும் என்று வாதிட்டார்.
இந்நிலையில் பராமரிப்பு பணிகளுக்கு அனுமதியளிப்பது தொடர்பாக வரும் ஜூன் 1ம்தேதிக்குள் தமிழக அரசு முடிவு எடுக்கவேண்டும் என்று கூறி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.