
இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டதற்கு காரணம் இந்தியா - இலங்கை வெளியுறவு அமைச்சர்
செய்தி முன்னோட்டம்
இலங்கையில் கடந்த ஆண்டு கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.
அதில் அந்நிய செலவாணி இருப்பு குறைந்து, உணவு தானியங்கள், டீசல்,பெட்ரோல் உள்ளிட்டவைகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது என்று தகவல்கள் வெளியானது.
மின்சாரம் கூட நிலையாக இல்லாமல் மக்கள் அவதிக்குள்ளானார்கள்.
இதனால் இலங்கை மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர், அதிபர் மாளிகையையும் கைப்பற்றினர்.
எனினும் பல்வேறு திருப்பங்களுக்கு பிறகு தற்போது இலங்கை அதிபராக ரணில் விக்ரம்சிங்க, பிரதமராக தினேஷ் குணவர்த்தன ஆகியோர் பதவி வகிக்கிறார்கள்.
இந்நிலையில் இலங்கை கடும் நெருக்கடியில் இருந்தபோது, இந்தியா தனது உதவிக்கரத்தினை நீட்டியது.
அங்குள்ள மக்களுக்கு போதுமான அளவிற்கு உணவு தானியங்கள், உயிர்காக்கும் மருந்துகள், பெட்ரோல்,டீசல் ஆகியவற்றை வழங்கியது.
தற்போது இலங்கை படிப்படியாக நெருக்கடியில் இருந்து மீண்டுவருகிறது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.
ரூ.32 ஆயிரம் கோடி நிதியுதவி
இந்தியாவிற்கு புகழாரம் சூட்டி பேசிய இலங்கை வெளியுறவு அமைச்சர்
இச்சூழலில் டெல்லியில் அண்மையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி கலந்துகொண்டார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடன் பேசியபொழுது, கடந்த ஆண்டு மே, ஜூன் மாதங்களில் இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியது.
தற்போது சற்று அதிலிருந்து மீண்டு பணவீக்கம் கட்டுக்குள் வந்துள்ளது.
சர்வதேச செலவாணி நிதியத்தின் நிதியுதவியை எதிர்பார்க்கிறோம் என்று கூறியுள்ளார்.
மேலும், பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மீள இந்தியாவே காரணம்.
மற்ற நாடுகளை விட இந்தியா எங்களுக்கு செய்த உதவி மிக அதிகம். 32 ஆயிரம் கோடி கடனுதவியை இந்தியா எங்களுக்கு வழங்கியுள்ளது என்று அவர் புகழாரம் சூட்டி பேசியுள்ளார்.
தொடர்ந்து, இந்தியாவிற்கு நாங்கள் நன்றி கடன் பட்டிருக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.