NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை முன்னிட்டு 75 ரூபாய் நாணயம் வெளியிடப்படும்
    இந்தியா

    புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை முன்னிட்டு 75 ரூபாய் நாணயம் வெளியிடப்படும்

    புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை முன்னிட்டு 75 ரூபாய் நாணயம் வெளியிடப்படும்
    எழுதியவர் Sindhuja SM
    May 26, 2023, 09:52 am 1 நிமிட வாசிப்பு
    புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை முன்னிட்டு 75 ரூபாய் நாணயம் வெளியிடப்படும்
    நாணயத்தின் மறுபக்கத்தில் நாடாளுமன்ற வளாகத்தின் படம் பொறிக்கப்பட்டிருக்கும்.

    புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை நினைவுகூரும் வகையில் 75 ரூபாய் நாணயம் வெளியிடப்படும் என நிதியமைச்சகம் நேற்று(மே 26) அறிவித்துள்ளது. இந்தியாவின் 75 ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் இந்த ரூ.75 நாணயம் வெளியிடப்பட இருக்கிறது. நாணயத்தின் ஒரு பக்கத்தில் அசோக தூணின் சிங்க தலை பொறிக்கப்பட்டிருக்கும். அதற்கு கீழே "சத்யமேவ் ஜெயதே"(வாய்மையே வெல்லும்) என்ற வாசகம் எழுதப்பட்டிருக்கும். இடது பக்கத்தில் "பாரத்" என்ற வார்த்தை தேவநாகரி எழுத்துகளிலும், வலதுபுறத்தில் "இந்தியா" என்ற வார்த்தை ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருக்கும். மேலும், சிங்க தலை சின்னத்திற்கு கீழே "₹ 75" என்று ரூபாயின் மதிப்பு எழுதப்பட்டிருக்கும். நாணயத்தின் மறுபக்கத்தில் நாடாளுமன்ற வளாகத்தின் படம் பொறிக்கப்பட்டிருக்கும்.

    புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பார் 

    அதற்கு மேலே "சன்சாத் சங்குல்" என்ற வார்த்தைகள் தேவநாகரி எழுத்துக்களிலும், அதற்கு கீழே "பார்லிமென்ட் காம்ப்ளெக்ஸ்"(Parliament Complex) என்ற வார்த்தை ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருக்கும். இது 44 மில்லிமீட்டர் விட்டம் கொண்ட வட்ட வடிவிலான நாணயமாக வடிவமைக்கப்பட்டிருக்கும். அதன் விளிம்புகளில் 200 வரிகள் இருக்கும். 35 கிராம் எடை கொண்ட இந்த நாணயம் 50% வெள்ளி, 40% செம்பு, 5% நிக்கல் மற்றும் 5% துத்தநாகம் ஆகியவற்றால் தயாரிக்கப்படும். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி வரும் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கிறார். இந்த விழாவில் 25 கட்சிகள் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், குறைந்தது 20 எதிர்க்கட்சிகள் இந்த நிகழ்வைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளன.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    இந்தியா
    நரேந்திர மோடி
    நாடாளுமன்றம்

    இந்தியா

    விருதுநகர் மாவட்டத்தில் 104 டாஸ்மாக் கடைகளுக்கு சீல்! விருதுநகர்
    பாரா துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பை 2023 : ஒரே நாளில் 2 பதக்கங்களை கைப்பற்றிய இந்தியா! உலக கோப்பை
    எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற திறப்பு விழாவில் கலந்து கொள்ள வேண்டும்: நிர்மலா சீதாராமன் வேண்டுகோள்  மோடி
    காதலியின் உடலை துண்டுதுண்டாக வெட்டி பிரிட்ஜிக்குள் வைத்திருந்த காதலன் கைது ஹைதராபாத்

    நரேந்திர மோடி

    புதிய நாடாளுமன்ற திறப்பு விழா: அழைப்பை ஏற்றுக்கொண்ட 2 எதிர்க்கட்சிகள்  இந்தியா
    தமிழகத்தின் 'செங்கோல்' புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் வைக்கப்படும்: அமித்ஷா  இந்தியா
    பெங்களூரில் புதிய தூதரகத்தை அமைக்க ஆஸ்திரேலியா முடிவு  ஆஸ்திரேலியா
    இந்து கோவில்கள் சிதைக்கப்படுவதற்கு எதிராக நடவடிக்கை: இந்திய-ஆஸ்திரேலிய பிரதமர்கள் முடிவு இந்தியா

    நாடாளுமன்றம்

    புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு புதிய பெயர் வைக்கப்படலாம்  இந்தியா
    புதிய நாடாளுமன்றத்தில் தமிழத்தின் 'செங்கோல்': தமிழர்களின் இதயங்களை தொட முயற்சிக்கிறதா பாஜக  இந்தியா
    பிறப்பு, இறப்பு விவரங்களை வாக்காளர் பட்டியலில் இணைக்கும் மசோதா விரைவில் செயல்படுத்தப்படும்: அமித்ஷா இந்தியா
    மே 28ம் தேதி புதிய  நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி  இந்தியா

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023