LOADING...
ஜனவரி 1 முதல் வந்தே பாரத் உள்ளிட்ட 7 ரயில்களின் நேரம் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
ஜனவரி 1 முதல் வந்தே பாரத் உள்ளிட்ட 7 ரயில்களின் நேரம் மாற்றம்

ஜனவரி 1 முதல் வந்தே பாரத் உள்ளிட்ட 7 ரயில்களின் நேரம் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Dec 29, 2025
10:19 am

செய்தி முன்னோட்டம்

பயணிகளின் வசதிக்காகவும், ரயில்களின் இயக்க திறனை மேம்படுத்தவும் வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் தமிழகத்தில் இயக்கப்படும் வந்தே பாரத் உள்ளிட்ட 7 முக்கிய ரயில்களின் கால அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. புதிய கால அட்டவணையின்படி, கீழ்க்கண்ட வந்தே பாரத் ரயிலில் குறிப்பிட்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன: சென்னை - நெல்லை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்: தற்போது, எழும்பூரில் இருந்து மதியம் 2.45 மணிக்கு புறப்பட்டு திருநெல்வேலியை இரவு 10.30 மணிக்கு சென்றடையும் இந்த ரயில், வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் மதியம் 3.05 மணிக்கு எழும்பூரிலிருந்து புறப்படும். திருநெல்வேலிக்கு இரவு 10.40 மணிக்குச் சென்றடையும்.

மற்ற ரயில்கள்

மற்ற விரைவு ரயில்களின் நேரமும் மாற்றப்பட்டுள்ளன

வந்தே பாரத் ரயில் தவிர வேறு சில விரைவு ரயில்களின் பயண நேரமும் மாற்றப்பட்டுள்ளன. வைகை எக்ஸ்பிரஸ் (சென்னை எழும்பூர்-மதுரை): இந்த ரயில் தற்போது மதியம் 1:45-க்கு புறப்பட்டு இரவு 9:20-க்கு மதுரை சென்றடைகிறது. ஜனவரி 1 முதல், அரை மணி நேரம் முன்கூட்டியே மதியம் 1:15-க்கு புறப்படும். இது மதுரைக்கு இரவு 9:10 மணிக்குச் சென்றடையும். முத்துநகர் எக்ஸ்பிரஸ் (சென்னை எழும்பூர்-தூத்துக்குடி): தூத்துக்குடி செல்லும் முத்துநகர் ரயில் இனி மாலை 7:30-க்கு பதிலாக, 15 நிமிடங்கள் முன்கூட்டியே மாலை 7:15-க்கு புறப்படும். இது தூத்துக்குடிக்கு அதிகாலை 5:55 மணிக்கே சென்றடையும்.

மற்ற ரயில்கள்

மாற்றப்பட்ட ரயில் அட்டவணை

பொதிகை எக்ஸ்பிரஸ் (எழும்பூர்-செங்கோட்டை): செங்கோட்டை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் இனி இரவு 8:10-க்குப் பதிலாக, மாலை 7:35 மணிக்கே (35 நிமிடங்கள் முன்னதாக) புறப்படும். இதன் மூலம் செங்கோட்டைக்கு காலை 6:40 மணிக்கே பயணிகள் சென்றடையலாம். நெல்லை எக்ஸ்பிரஸ் (சென்னை எழும்பூர்-திருநெல்வேலி): நெல்லை எக்ஸ்பிரஸ் வழக்கமாக இரவு 8:40-க்குப் புறப்படும். புத்தாண்டு முதல் இது 10 நிமிடங்கள் தாமதமாக இரவு 8:50-க்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7:00 மணிக்குத் திருநெல்வேலி சென்றடையும். தாம்பரம்-கொல்லம் எக்ஸ்பிரஸ்: இந்த ரயில் மாலை 5:27-க்குப் பதிலாக, மாலை 5:15-க்கே தாம்பரத்திலிருந்து புறப்படும். சேது எக்ஸ்பிரஸ் (எழும்பூர்-ராமேஸ்வரம்): இந்த ரயில் மாலை 5:45-க்கு பதிலாக 10 நிமிடங்கள் தாமதமாக மாலை 5:55-க்கு புறப்படும்.

Advertisement