LOADING...
தென் தமிழக ரயில் பயணிகளே அலெர்ட்; நவம்பர் 29 வரை தாம்பரத்திலிருந்துதான் ரயில்கள் கிளம்பும் என அறிவிப்பு
தென் தமிழக ரயில் பயணிகளே அலெர்ட்

தென் தமிழக ரயில் பயணிகளே அலெர்ட்; நவம்பர் 29 வரை தாம்பரத்திலிருந்துதான் ரயில்கள் கிளம்பும் என அறிவிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Nov 09, 2025
12:48 pm

செய்தி முன்னோட்டம்

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்குப் பயணிக்கும் ஆயிரக்கணக்கான பயணிகளுக்குத் தெற்கு ரயில்வே ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைமேடை சீரமைப்பு உள்ளிட்ட பராமரிப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், முக்கிய விரைவு ரயில்கள் வழக்கம் போல் எழும்பூரில் இருந்து இயக்கப்படாமல், தற்காலிகமாகத் தாம்பரத்தில் இருந்தே புறப்படும் மற்றும் அங்கேயே நிறுத்தப்படும். முதலில் செப்டம்பர் 10 முதல் நவம்பர் 10 வரை இந்த மாற்றம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பணிகள் நிறைவடையாத காரணத்தால், இந்த நீட்டிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நவம்பர் 10 முதல் நவம்பர் 29 வரை, பல முக்கியத் தென்மாவட்ட ரயில்கள் எழும்பூருக்குப் பதிலாகத் தாம்பரத்தில் இருந்தே புறப்படும்.

ரயில்கள்

மாற்றப்பட்ட ரயில்களின் விவரங்கள்

மாற்றப்பட்ட ரயில்களில் உழவன் எக்ஸ்பிரஸ் (எழும்பூர் - தஞ்சாவூர்), அனந்தபுரி எக்ஸ்பிரஸ் (கொல்லம் - எழும்பூர்), சேது அதிவேக விரைவு ரயில் (ராமேஸ்வரம் - எழும்பூர்), ராமேஸ்வரம் - எழும்பூர் விரைவு ரயில் ஆகிய ரயில்கள் அடங்கும். மேலும், எழும்பூர் - குருவாயூர் எக்ஸ்பிரஸ் மறு அறிவிப்பு வரும் வரை தாம்பரத்தில் இருந்து புறப்படும்/நிறுத்தப்படும். மற்றொரு மாற்றமாக, சென்னை எழும்பூர் - மும்பை அதிவிரைவு ரயில் (நவம்பர் 11 முதல் நவம்பர் 30 வரை) எழும்பூருக்குப் பதிலாகச் சென்னை கடற்கரை நிலையத்தில் இருந்து காலை 6:45 மணிக்குக் புறப்படும். அகமதாபாத் - திருச்சி வாராந்திர விரைவு சிறப்பு ரயிலும் நவம்பர் 13, 20 மற்றும் 27 ஆகிய தேதிகளில் செங்கல்பட்டு வழியாக இயக்கப்படும்.