
அடுத்த மாபெரும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்கிறார் சோனியா காந்தி
செய்தி முன்னோட்டம்
ஜூலை 17-18 தேதிகளில் பெங்களூரிவில் நடைபெற இருக்கும் எதிர்க்கட்சித் தலைவர்களின் அடுத்த கூட்டத்தில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கலந்து கொள்வார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இந்த கூட்டத்தின் போது, முக்கிய எதிர்க்கட்சி தலைவர்களுக்கு சோனியா காந்தி விருந்தளிக்கவுள்ளார்.
இதற்காக ஆம் ஆத்மி உட்பட 24-எதிர்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டு பொது தேர்தல் நடைபெற இருப்பதால், பாஜகவை எப்படியாவது தோற்கடித்துவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் இணைந்து தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
இந்த கருத்து வேறுபாடுகளை நீக்கி மொத்த எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்கும் விதமாக பீகார் முதல்வரும் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவருமான நிதிஷ் குமார் தலைமையில் கடந்த மாதம் 23ஆம் தேதி பீகாரில் வைத்து ஒரு எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்றது.
யவ்
அடுத்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் மதிமுக, விசிக பங்கேற்குமா?
இந்த கூட்டத்தில் தமிழகத்தின் திமுக, மேற்கு வங்கத்தின் திரிணாமுல் காங்கிரஸ், மகாராஷ்டிராவின் தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட 17 எதிர்க்கட்சிகள் கலந்து கொண்டன.
இந்நிலையில், 24 அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஜூலை 17-ம் தேதி பெங்களூரில் சந்திக்க உள்ளனர். இந்த சந்திப்பின் போது எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை குறித்தும் கூட்டணி குறித்தும் விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
மருமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்(மதிமுக), கொங்கு தேச மக்கள் கட்சி (KDMK), விடுதலை சிறுத்தைகள் கட்சி(விசிக), புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி (RSP), அகில இந்திய பார்வர்டு பிளாக், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML), கேரள காங்கிரஸ் (ஜோசப்), மற்றும் கேரள காங்கிரஸ் (மணி)ஆகிய எதிர்க்கட்சிகளும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும் என்று எதிர்பார்கப்பதுகிறது.