ஸ்மிருதி இரானி முதல் ராஜீவ் சந்திரசேகர் வரை: 2024 தேர்தலில் தோல்வியடைந்த மத்திய அமைச்சர்களின் பட்டியல்
2024 பொது தேர்தலில் தோல்வியடைந்த மத்திய அமைச்சர்களின் பட்டியல் பின்வருமாறு: ஸ்மிருதி இரானி: அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி தோல்வியடைந்தது பாஜகவின் மிக பெரிய தோல்விகளில் ஒன்றாகும். 2019ல் ராகுல் காந்தியை தோற்கடித்த அமேதியில் வென்ற இரானி, தற்போது காங்கிரஸ் வேட்பாளர் கிஷோரி லால் சர்மா உடன் போட்டியிட்டு 1,67,196 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இந்த தோல்வியானது அமேதியில் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. அஜய் மிஸ்ரா தேனி: சர்ச்சைக்குரிய லக்கிம்பூர் கேரி சம்பவத்தில் சிக்கிய மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா தேனி, சமாஜ்வாதி கட்சியின் உட்கர்ஷ் வர்மாவால் 34,329 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டார்.
அர்ஜுன் முண்டா:
மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சரான அர்ஜுன் முண்டா, ஜார்க்கண்டின் குந்தி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் காளிசரண் முண்டாவிடம் 1,49,675 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். ராஜீவ் சந்திரசேகர்: மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சரான ராஜீவ் சந்திரசேகர், கேரளாவின் திருவனந்தபுரத்தில், காங்கிரஸ் தலைவர் சசி தரூருடன் போட்டியிட்டு 16,077 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். அதுபோக, கைலாஷ் சவுத்ரி, மகேந்திர நாத் பாண்டே, கவுசல் கிஷோர், சாத்வி நிரஞ்சன் ஜோதி, சஞ்சீவ் பல்யான், ராவ் சாஹேப் தன்வே, ஆர்.கே.சிங், வி.முரளீதரன், எல்.முருகன், சுபாஸ் சர்க்கார், நிஷித் பிரமானிக் போன்ற அமைச்சர்களும் 2024 தேர்தலில் தோல்வி அடைந்தனர்.