அதிமுக மாநாட்டில் கனிமொழி குறித்து அவதூறு பாடல் - மகளிர் ஆணையத்தில் புகார்
செய்தி முன்னோட்டம்
கடந்த 20ம் தேதி மதுரை மாநகரில் அதிமுக கட்சியினர் 'எழுச்சி மாநாடு' நிகழ்வினை மிக பிரம்மாண்டமாக நடத்தினர்.
இந்த மாநாட்டில் கலைநிகழ்ச்சிகளும் அரங்கேறியது.
அவ்வாறு நடந்த கலைநிகழ்ச்சியில் திமுக எம்.பி.கனிமொழி குறித்து மேடையில் அவதூறாக பாடல் ஒன்று பாடப்பட்டதாகவும், அப்பாடலுக்கு அதிமுக அதிமுக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் கைத்தட்டி சிரித்தபடி ரசித்தனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து திமுக மகளிரணி சார்பில் மகளிர் ஆணையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
அந்த பாடலினை பாடியவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகாரில் கோரப்பட்டுள்ளது.
இதனிடையே, அந்த குற்றம்சாட்டப்படும் அந்நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
கனிமொழி குறித்து அவதூறு பாடல்
#JUSTIN | மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டில் திமுக எம்.பி. கனிமொழி குறித்து அவதூறாக பாடல்; இப்பாடலுக்கு முன்னாள் அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் கைதட்டி சிரிக்கின்றனர் என மாநில மகளிர் ஆணையத்தில் புகார்
— Sun News (@sunnewstamil) August 22, 2023
நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அதிமுக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு;…