LOADING...
12 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் 'SIR' இன்று தொடக்கம்; நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை
12 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் 'SIR' இன்று தொடக்கம்

12 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் 'SIR' இன்று தொடக்கம்; நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை

எழுதியவர் Venkatalakshmi V
Nov 04, 2025
12:01 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல்களை தூய்மைப்படுத்தும் பணியின் கீழ், Special Integrated Revision -SIR இரண்டாம் கட்டம் இன்று தொடங்க உள்ளது. தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்கள் மற்றும் UT-களில் இந்த பணி தீவிரமாக நடைபெற உள்ளது. வாக்காளர் பட்டியலில் உள்ள பிழைகளை சரிசெய்வது, போலியான அல்லது ஒரே பெயரில் பல பதிவுகளை நீக்குவது, வாக்காளர்களின் தரவை புதுப்பிப்பது மற்றும் துல்லியமான பட்டியலை உருவாக்குவது இதன் முக்கிய நோக்கமாகும். SIR-ன் முதல் சுற்றில், நாடு முழுவதும் இருந்து சுமார் 1.25 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டனர். இன்று தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா, குஜராத், ஒடிசா உள்ளிட்ட 12 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் இரண்டாம் சுற்று SIR நடக்கிறது.

விவரங்கள்

உங்கள் வீட்டுக்கு வரும் BLO-க்கள்—நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை

SIR ஒரு பகுதியாக, வாக்காளர் பதிவு அலுவலர்கள் இன்று முதல் வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரடியாக வரத் தொடங்குவார்கள். அவர்கள் வாக்காளரின் இருப்பிடத்தை நேரில் சென்று சரிபார்ப்பார்கள். அப்போது வாக்காளர்கள் தங்கள் அடையாள அட்டை (EPIC) மற்றும் இருப்பிடச் சான்றை (Address Proof) காண்பித்து ஒத்துழைக்க வேண்டும். பெயர், முகவரி, வயது, பாலினம் போன்ற விவரங்கள் சரியாக உள்ளதா எனச் சரிபார்த்து, ஏதேனும் பிழை இருந்தால், அதை BLO-விடம் சுட்டிக்காட்டி உடனடியாகப் படிவம் 8 (Form 8) மூலம் திருத்தம் செய்து கொள்ளலாம்.

நீக்கம்

பெயர் நீக்கம் மற்றும் சேர்த்தல்

BLO அதிகாரிகள் பட்டியலில் சரி பார்த்த பின்னர், ஒரே பெயரில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பதிவாகி இருந்தால் அல்லது இறந்தவர்களின் பெயர்கள் இருந்தால் அவற்றை நீக்க பரிந்துரைப்பார்கள். அதனால் உங்கள் பெயர் தவறாக நீக்கப்படுவதை தவிர்க்க, சரியான இருப்பிடத்தைப் பதிவு செய்துள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்தவும். புதிய பெயர் சேர்க்க, 18 வயது பூர்த்தியானவர்களைச் சேர்ப்பதற்கான விண்ணப்பங்களை BLO அதிகாரிகள் கொண்டுவருவார்கள். 18 வயது பூர்த்தியானவர்கள் படிவம் 6 (Form 6) மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். வாக்காளர் பட்டியல் துல்லியமாக இருக்க இந்தப் பணி முக்கியம் என்பதால், தங்கள் வீட்டிற்கு வரும் BLO-க்களுக்குச் சரியான தகவல்களை அளித்து, பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.