Page Loader
 சென்னையில் போக்குவரத்துக்கு ஒரே பயண டிக்கெட்! சட்டப்பேரவையில் அறிவிப்பு
சென்னையில் போக்குவரத்துக்கு இனி ஒரே டிக்கெட் -அரசு அறிவிப்பு

 சென்னையில் போக்குவரத்துக்கு ஒரே பயண டிக்கெட்! சட்டப்பேரவையில் அறிவிப்பு

எழுதியவர் Siranjeevi
Apr 14, 2023
01:44 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் உள்ள சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மெட்ரோ ரயில் சேவை உருவானது. இந்த சேவை பயனளிப்பதால், மதுரை மற்றும் கோவையிலும் மெட்ரோ உருவாக்க பணிகள் நடைப்பெற்று வருகின்றன. இந்நிலையில், சென்னை புறநகர் ரயில் மற்றும் மெட்ரோ ரயில் என அனைத்திற்கு ஒரே டிக்கெட் என சட்டப்பேரவையில் அறிவித்துள்ளனர். அதன்படி சென்னையில் மாநகரப்பேருந்து, புறநகர் ரயில் மற்றும் மெட்ரோ என அனைத்து விதமான போக்குவரத்திற்கும் ஒரே இ-டிக்கெட் முறையை அறிமுகப்படுத்தியுள்ளனர். இதற்கான QR கோட் பயணசீட்டு முறை மற்றும் பயணத்திட்டத்துக்கான செயலி 15 கோடி மதிப்பில் உருவாக்கப்படும் என அறிவித்துள்ளனர்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post