சிக்கிம் வெள்ளம்: 53 பேர் பலி, 143 பேர் மாயம்
செய்தி முன்னோட்டம்
சிக்கிமில் ஏற்பட்ட வெள்ளத்தால் ஏழு இராணுவ வீரர்கள் உட்பட குறைந்தது 53 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், மேற்கு வங்கத்தில் உள்ள டீஸ்டா நதிப் படுகையில் 27 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. இதில் ஏழு உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த வெள்ளத்தால் 140க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர், ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.
இதனால், 1,173 வீடுகள் கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும், 2,413 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் சிக்கிம் அரசு தெரிவித்துள்ளது.
டீஸ்டா-வி நீர்மின் நிலையத்திற்கு கீழே உள்ள அனைத்து பாலங்களும் நீரில் மூழ்கி, வடக்கு சிக்கிம் உடனான தொடர்பை சீர்குலைத்துள்ளன.
சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமாங் தலைமையில் மீட்பு, நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு குறித்து விவாதிக்க நேற்று உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது.
சிகவ்ன்ல்ஸால்
அடுத்த ஐந்து நாட்களுக்கு மழை தொடர வாய்ப்பு
சுங்தாங் வரையிலான சாலை இணைப்பை மீண்டும் திறப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் நாகா முதல் டூங் வரையிலான சாலை விரைவில் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிக்கிம் அதிகாரிகள் சுங்தாங்கிற்கான சாலை இணைப்பை மீண்டும் திறப்பதற்கும், நாகாவிலிருந்து டூங் வரையிலான சாலையை அமைப்பதற்கும் முன்னுரிமை அளித்து வருகின்றனர்.
மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அடுத்த ஐந்து நாட்களுக்கு மங்கன் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது.