LOADING...
காஞ்சி சங்கர மடத்தின் 71வது இளைய மடாதிபதியாக ஸ்ரீஸ்ரீஸ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் நியமனம்
71வது இளைய மடாதிபதியாக ஸ்ரீ துட்டு சத்ய வெங்கடசூர்ய சுப்ரமணிய கணேச சர்மா பொறுப்பேற்றார்

காஞ்சி சங்கர மடத்தின் 71வது இளைய மடாதிபதியாக ஸ்ரீஸ்ரீஸ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் நியமனம்

எழுதியவர் Venkatalakshmi V
Apr 30, 2025
10:07 am

செய்தி முன்னோட்டம்

பழமையான ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 71வது இளைய மடாதிபதியாக ஸ்ரீ துட்டு சத்ய வெங்கடசூர்ய சுப்ரமணிய கணேச சர்மா இன்று (ஏப்ரல் 30) பொறுப்பேற்றார். தீட்சை பெற்று, இவருக்கு "ஸ்ரீஸ்ரீஸ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்" என்ற புனித நாமம் சூட்டப்பட்டது. இவ்விழா, அட்சய திருதியை நாளான இன்று காலை 6 மணி அளவில் காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் உள்ள பஞ்ச கங்கை தீர்த்தத்தில் நடைபெற்றது. இதில், தற்போதைய மடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், கணேச சர்மாவுக்கு சன்யாச ஆசிரம தீட்சையை வழங்கினார்.

நிகழ்வுகள்

மடாதிபதி பதவியேற்பு விழாவில் ஆளுநர் ரவி பங்கேற்றார்

விழாவின் முக்கிய நிகழ்வாக, தீர்த்தக்குளத்தில் அபிஷேகம், காவி வஸ்திரம் வழங்கல், பூணூல் மற்றும் அரைஞான கயிற்றை துறக்கும் செயல்கள் இடம்பெற்றன. பின்னர், கமண்டலமும் தண்டமும் வழங்கப்பட்டு, கருடாசனத்தில் அமர்ந்த விஜயேந்திரர், சாளக்கிராமத்தை தலைக்குள் வைத்து சங்கு தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து ஆசி வழங்கினார். இவ் விழாவில், தமிழக ஆளுநர் ஆர். என். ரவி, பல ஆதீனங்கள், மடாதிபதிகள், சன்னியாசிகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை சங்கர மடத்தின் மேலாளர் ந. சுந்தரேச அய்யர் கவனித்தார். புதிய மடாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்ரீ சத்ய சந்திரசேகரேந்திரர், ஆந்திர மாநிலம் துனி நகரில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post