Page Loader
ஷிவ் தாஸ் மீனா தமிழக அரசின் புதிய தலைமை செயலாளராக நியமனம்; யார் அவர்?
தமிழக அரசுக்கு புதிய தலைமை செயலாளர் நியமனம்

ஷிவ் தாஸ் மீனா தமிழக அரசின் புதிய தலைமை செயலாளராக நியமனம்; யார் அவர்?

எழுதியவர் Sekar Chinnappan
Jun 29, 2023
02:56 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாடு அரசின் புதிய தலைமை செயலாளராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஷிவ் தாஸ் மீனா நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய தலைமை செயலாளர் வி.இறையன்பு இந்த மாதத்துடன் பணியிலிருந்து ஓய்வு பெறும் நிலையில், புதிய தலைமை செயலாளர் நியமனம் குறித்த அறிவிப்பு வியாழக்கிழமை (ஜூன் 29) வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் முதன்மை செயலாளர் ரா.அன்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இதை உறுதிப்படுத்தி உள்ளார். தமிழக அரசின் ஐஏஎஸ் அதிகாரிகள் பட்டியலில் ஷிவ் தாஸ் மீனாவை விட சீனியர்களாக ஹன்ஸ்ராஜ் வர்மா மற்றும் கே.பிரபாகர் இருந்தாலும், ஆரம்பம் முதலே ஷிவ் தாஸ் மீனாவுக்கு தான் வாய்ப்பு கிடைக்கும் என பரவலாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

shivdas meena background

ஐஏஎஸ் அதிகாரி ஷிவ் தாஸ் மீனாவின் பின்னணி

ராஜஸ்தானை சேர்ந்த ஷிவ் தாஸ் மீனா 1989 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். மாளவியா பொறியியல் கல்லூரியில் சிவில் எஞ்சினியரிங் படித்த இவர், பின்னர் ஜப்பானில் சர்வதேச ஆய்வுகளில் முதுகலைப் பட்டம் பெற்றார். முன்னர் ஜெயலலிதா அரசில் அவரது நான்கு தனி செயலாளர்களில் ஒருவராக இருந்து, ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவராக திகழ்ந்தார். ஜெயலலிதா மறைந்த பின்னர் மத்திய அரசு பணிக்கு சென்றுவிட்ட ஷிவ் தாஸ் மீனா, ஸ்டாலின் முதல்வரான பிறகு, மீண்டும் தமிழக அரசு பணிக்குத் திரும்பினார். இவர் இக்கட்டான நேரங்களில் திறமையாக செயல்படக் கூடியவர் என கூறப்படும் நிலையில், ஸ்டாலினின் குட்புக்கிலும் இருந்து வந்ததால், தற்போது தலைமை செயலாளர் வாய்ப்பு தேடி வந்துள்ளதாக தலைமை செயலக வட்டாரங்களில் கூறப்படுகிறது.