முன்னாள் மத்திய அமைச்சர் சரத் யாதவ் காலமானார்
ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சரத் யாதவ் நேற்று(ஜன:13) காலமானார். இந்த செய்தியை அவரது மகள் சுபாஷினி ஷரத் யாதவ் ட்விட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார். ஜேபி இயக்கத்தின் முக்கிய முகங்களில் ஒருவரான ஷரத் யாதவ் சில உடல்நலப் பிரச்சினைகளால் குருகிராமில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 75 வயதான இவர், நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மூன்று முறை பாராளுமன்ற உறுப்பினராக இருந்த சரத் யாதவ், ஏழு முறை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். குருகிராமில் உள்ள ஃபோர்டிஸ் நினைவு ஆராய்ச்சி நிறுவனம் இதற்கு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
மருத்துவமனையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
சரத் யாதவை அவசர சிகிச்சை பிரிவிற்கு அழைத்து செல்லும் போதே அவருக்கு சுய நினைவு இல்லை என்பதை மருத்துவமனை கூறி இருக்கிறது. மேலும், "பரிசோதனையில், அவருக்கு நாடித்துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம் இல்லாதது தெரிய வந்தது. ACLS நெறிமுறைகளின்படி, அவருக்கு CPR அளிக்கப்பட்டது. அப்போது, எவ்வளவோ முயற்சி செய்தும், அவரை உயிர்ப்பிக்க முடியவில்லை. இரவு 10.19 மணிக்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது." என்றும் மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "சரத் யாதவ் அவர்களின் மறைவு வேதனை அளிக்கிறது. தனது நீண்ட பொது வாழ்வில், எம்.பி, அமைச்சர் என தனித்து விளங்கியவர் அவர். நாங்கள் பேசிக்கொண்ட கருத்துக்களை நான் எப்போதும் மறக்கமாட்டேன். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்." என்று பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்திருக்கிறார்.