LOADING...
தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியில் நீடிக்க சரத் பவார் முடிவு 
தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியில் நீடிக்க சரத் பவார் முடிவு

தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியில் நீடிக்க சரத் பவார் முடிவு 

எழுதியவர் Nivetha P
May 05, 2023
07:24 pm

செய்தி முன்னோட்டம்

மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வராகவும் மத்தியஅமைச்சராகவும் இருந்தவர் சரத்பவார். தற்போது மகாராஷ்டிராவில் செயல்பட்டு வரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பு வகித்துவருகிறார். 1999ம்ஆண்டு காங்கிரஸிலிருந்து பிரிந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியினை துவங்கினார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய இவர்,மே.,1-1960ம்ஆண்டு முதல் மே.,1-2023ம்ஆண்டுவரை பொதுவாழ்வில் ஈடுபட்டுள்ளேன். தற்போது தலைவர் பதவியிலிருந்து விலக முடிவுசெய்துள்ளேன் என்று அறிவித்தார். வரும் நாடாளுமன்றத்தேர்தலில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணையவேண்டும் என்னும் கருத்து நிலவிவரும் நிலையில் இவருடைய அறிவிப்பு அதிர்ச்சியினை ஏற்படுத்தியது. இந்நிலையில் தமிழக-முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சரத்பவார் தன்னுடைய முடிவினை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். இதனையடுத்து தற்போது சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகும் முடிவினை திரும்பப்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement