Page Loader
கழிவு நீர் தொட்டிகளை சுத்தம் செய்ய, விரைவில் நவீன இயந்திரம்: அமைச்சரவை கூட்டத்தில் முடிவு 
நவீன இயந்திரம் மூலமாக கழிவு நீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் திட்டம்

கழிவு நீர் தொட்டிகளை சுத்தம் செய்ய, விரைவில் நவீன இயந்திரம்: அமைச்சரவை கூட்டத்தில் முடிவு 

எழுதியவர் Arul Jothe
திருத்தியவர் Venkatalakshmi V
May 23, 2023
04:24 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கழிவுநீர்த் தொட்டிகள் மற்றும் பாதாளச் சாக்கடைகளில் ஏற்படும் இறப்புகளை தடுப்பதற்கான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக நடத்தப்பட்ட இந்த கூட்டத்தில் கழிவுநீர்த் தொட்டிகள் மற்றும் பாதாளச் சாக்கடைகளை சுத்தம் செய்யும் போது ஏற்படும் இறப்புகளை தடுப்பதற்காக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த திட்டத்தை 4 மாதங்களில் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அரசு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். பிப்ரவரி மாதமே ஒரு அமைப்புடன் சேர்ந்து கழிவு நீரகற்று வாரியம் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது.

embed

Twitter Post

கழிவுநீர்த் தொட்டிகள் மற்றும் பாதாளச் சாக்கடைகளில் ஏற்படும் இறப்புகளை தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்கள் தலைமையில் நடைபெற்றது.#CMMKSTALIN #TNDIPR @CMOTamilnadu @KN_NEHRU @IPeriyasamymla pic.twitter.com/LwZsDSdJbG— TN DIPR (@TNDIPRNEWS) May 22, 2023