தமிழகத்தில் வேகமாக பரவி வரும் வைரஸ் காய்ச்சல்
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு முழுவதுமுள்ள பல்வேறு மாவட்டங்களில் அவ்வப்போது மழையும், சுட்டெரிக்கும் வெயிலும் மாறி மாறி வருகிறது.
இந்த காலநிலை மாற்றத்தால் சளி, இருமல், காய்ச்சல், உள்ளிட்ட உபாதைகள் மக்களுக்கு ஏற்பட்டு வருகிறது என்று கூறப்படுகிறது.
இது போன்ற உபாதைகள் கொண்டு துவங்கும் இந்த வைரஸானது அடுத்ததாக கடும் தொண்டைவலியினை ஏற்படுத்துகிறது என்றும் கூறப்படுகிறது.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த பாதிப்பால் அவஸ்தைபடும் நிலையில், மருத்துவமனைகளில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
பள்ளி செல்லும் மாணவர்கள் இந்த வைரஸால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இது சரியாக ஒரு வாரம் ஆகிறதாம்.
சென்னை மாவட்டத்தில் இந்த வைரஸால் அதிகமானோர் பாதிப்படைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
வைரஸ்
கொசு கடிக்காமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கைகள்
இதற்கிடையே தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் இதுகுறித்து கூறுகையில், தற்போது ஒரு விதமான வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
இது டெங்கு வைரஸ் இல்லையென்றாலும், டெங்குவிற்கான அறிகுறிகளை தான் கொண்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் டெங்கு பாசிட்டிவ் கேஸ்களும் அதிகரித்து வருகிறது என்று கூறியுள்ளனர்.
மழைநீர் தேங்குவதால் தான் டெங்கு கொசு உருவாகிறது.
எனவே தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சுடுதண்ணீர் குடிக்க வேண்டும், சூடான ஆகாரங்களை எடுத்து கொள்ள வேண்டும்.
கொசு கடிக்காமல் இருக்க தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.