Page Loader
டெல்லி-ஹவுரா வழித்தடத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டது; ரயில் சேவைகள் பாதிப்பு 

டெல்லி-ஹவுரா வழித்தடத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டது; ரயில் சேவைகள் பாதிப்பு 

எழுதியவர் Venkatalakshmi V
Jun 26, 2024
06:28 pm

செய்தி முன்னோட்டம்

டெல்லி-ஹவுரா ரயில் வழித்தடத்தில் உள்ள பிரயாக்ராஜ் நிரஞ்சன் தாட் பாலத்தில் இன்று மதியம் 3.07 மணியளவில் சரக்கு ரயிலின் மூன்று பெட்டிகள் தடம் புரண்டன. கான்பூரில் இருந்து தீன்தயாள் உபாத்யாய் சந்திப்புக்கு சென்று கொண்டிருந்த இந்த சரக்கு ரயில் தீடீரென தடம் புரண்டதில், கட்டுப்பட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக பிரயாக்ராஜில் இருந்து பிரயாக் வழியாக பிரதாப்கர் மற்றும் ராம்பாக் வழியாக வாரணாசிக்கு செல்லும் ரயில்களின் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது. தடம் புரண்ட பெட்டிகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. சரக்கு ரயில் தடம் புரண்டதற்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து ரயில்வே நிர்வாகம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த விபத்து குறித்த கூடுதல் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

ட்விட்டர் அஞ்சல்

சரக்கு ரயில் தடம் புரண்டது