NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மோடியின் புதிய அமைச்சரவையில் 7 பெண்கள் மத்திய அமைச்சர்களாக பதவியேற்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மோடியின் புதிய அமைச்சரவையில் 7 பெண்கள் மத்திய அமைச்சர்களாக பதவியேற்பு 

    மோடியின் புதிய அமைச்சரவையில் 7 பெண்கள் மத்திய அமைச்சர்களாக பதவியேற்பு 

    எழுதியவர் Sindhuja SM
    Jun 10, 2024
    10:16 am

    செய்தி முன்னோட்டம்

    நேற்று நடைபெற்ற 18வது அமைச்சரவை பதவியேற்பு விழாவில் இரண்டு மத்திய கேபினட் அமைச்சர்கள் உட்பட மொத்தம் ஏழு பெண்கள் புதிய அமைச்சர்கள் குழுவில் உறுப்பினர்களாக பதவியேற்றுள்ளனர்.

    கடந்த ஜூன் 5ஆம் தேதி கலைக்கப்பட்ட முந்தைய கவுன்சிலில் 10 பெண் அமைச்சர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    அந்த கவுன்சிலில் இருந்து நீக்கப்பட்டவர்களில் முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, இணை அமைச்சர்கள் பார்தி பவார், சாத்வி நிரஞ்சன் ஜோதி, தர்ஷனா ஜர்தோஷ், மீனாட்சி லேகி மற்றும் பிரதிமா பௌமிக் ஆகியோர் அடங்குவர்.

    புதிய பெண் அமைச்சர்களாக முன்னாள் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக எம்பிக்கள் அன்னபூர்ணா தேவி, ஷோபா-கரந்த்லாஜே, ரக்ஷா-கட்சே, சாவித்ரி தாக்கூர், நிமுபென்-பாம்பானியா, அப்னா தளம் எம்பி அனுப்ரியா-படேல் ஆகியோர் பதவியேற்றுள்ளனர்.

    இந்தியா 

    நிர்மலா சீதாராமன் மற்றும்  அன்னபூர்ணா தேவிக்கு மத்திய அமைச்சர் பதவி 

    நிர்மலா சீதாராமன் மற்றும் அன்னபூர்ணா தேவி ஆகியோர் மத்திய அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    மற்றவர்கள் இணை அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.

    இந்த மக்களவை தேர்தலில் ஸ்மிருதி இரானி மற்றும் பார்தி பவார் ஆகியோர் முறையே அமேதி மற்றும் தண்டோரியில் போட்டியிட்டு தோல்வியடைந்தனர்.

    கடந்த அமைச்சர்கள் குழுவில் இருந்த ஜோதி, ஜர்தோஷ், லேகி, பூமிக் ஆகியோரை பாஜக இந்த முறை அமைச்சர்களாக நியமிக்கவில்லை.

    சமீபத்திய தேர்தலில் வெற்றி பெற்ற தேவி, கரந்த்லாஜே, கட்சே, செஹ்ராவத் மற்றும் படேல் ஆகியோர் புதிய அமைச்சர்கள் குழுவில் இணைந்துள்ளனர்.

    இந்த ஆண்டு மக்களவைத் தேர்தலில் மொத்தம் 74 பெண்கள் வெற்றி பெற்றுள்ளனர், இது 2019 இல் தேர்ந்தெடுக்கப்பட்ட 78 பேரை விட சற்று குறைவாகும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    பிரதமர் மோடி
    நிர்மலா சீதாராமன்
    நிர்மலா சீதாராமன்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    இந்தியா

    உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி தொடரில் இந்தியா சாதனை தடகள போட்டி
    இன்று ஆறாம் கட்ட மக்களவை தேர்தல்: 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பு பொதுத் தேர்தல் 2024
    இன்று இரவு கரையை கடக்க இருக்கும் ரெமல் புயல்: கொல்கத்தாவில் விமான சேவைகள் இடை நிறுத்தம்  கொல்கத்தா
    பாலியல் குற்றச்சாட்டுகளால் ஜெர்மனிக்கு தப்பி ஓடிய கர்நாடக சட்டமன்ற உறுப்பினர் பிரஜ்வல் ரேவண்ணா மன்னிப்பு கோரினார்  கர்நாடகா

    பிரதமர் மோடி

    டெக் சிட்டியை டேங்கர் சிட்டியாக காங்கிரஸ் மாற்றியுள்ளது: பெங்களூரின் நிலைமை குறித்து பிரதமர் குற்றச்சாட்டு  பெங்களூர்
    சர்ச்சைகளை ஈர்த்த பிரதமர் மோடியின் 'ஊடுருவல்காரர்களுக்குச் செல்வம்' கருத்து பிரதமர்
    சொத்துப் பங்கீடு தொடர்பான சாம் பிட்ரோடாவின் கருத்து: காங்கிரஸின் நிலைப்பாடு என்ன? காங்கிரஸ்
     அத்துமீறி செயல்பட்டதாக குற்றச்சாட்டு: பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி பதிலளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ்  காங்கிரஸ்

    நிர்மலா சீதாராமன்

    அதானி குழும பிரச்சனை: பங்குகள் சரிவடைந்தற்கு பதிலளித்த நிதியமைச்சர் இந்தியா
    தமிழ் பழமொழி குறித்து நாடாளுமன்றத்தில் விவாதித்த நிதியமைச்சர் டெல்லி
    ஜி20 நிகழ்வில் நிதியமைச்சரை சந்தித்த கீதா கோபிநாத் நிர்மலா சீதாராமன்
    அதானி கடன் விவரங்களை வெளியிட முடியாது! நிர்மலா சீதாராமன் பதில் நிர்மலா சீதாராமன்

    நிர்மலா சீதாராமன்

    மகிளா சம்மான் சேமிப்பு திட்டம் - 7.5% வட்டியில் எப்போது கிடைக்கும்? சேமிப்பு திட்டங்கள்
    எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற திறப்பு விழாவில் கலந்து கொள்ள வேண்டும்: நிர்மலா சீதாராமன் வேண்டுகோள்  இந்தியா
    நிர்மலா சீதாராமனின் மகளுக்கு பிரதமர் மோடியின் ஆலோசகருடன்  திருமணம் இந்தியா
    '6 முஸ்லீம் நாடுகளில் குண்டு வீசப்பட்டது': பராக் ஒபாமாவிற்கு நிர்மலா சீதாராமன் பதிலடி இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025