செந்தில் பாலாஜி விவகாரம் - சட்ட வல்லுநர்களுடன் தமிழக முதல்வர் ஆலோசனை
தமிழகத்தின் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை என 2 இலக்காக்கள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இதனிடையே அவர் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை செய்ததாக அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை அண்மையில் கைது செய்தனர். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட காரணத்தினால் தற்போது பைபாஸ் சர்ஜரி செய்யப்பட்டு சென்னை காவேரி மருத்துவமனையில் அவர் சிகிச்சைப்பெற்று வருகிறார். இதனையடுத்து அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த 2 இலக்காக்கள் வேறு இருவருக்கு ஒதுக்கப்பட்டநிலையில், செந்தில் பாலாஜி இலாகா இல்லா அமைச்சராக தொடர்வார் என்று தமிழக அரசு அறிவித்தது. ஆனால், ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் தமிழக அரசின் அறிவிப்பினை அங்கீகரிக்காமல் செந்தில் பாலாஜி மீது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை, வேலைவாங்கித்தருவதாக பணத்தினை லஞ்சமாகப்பெற்ற வழக்குகள் உள்ளிட்டவை இருப்பதால் அவரை அமைச்சரவையில் இருந்து நீக்குவதாக தெரிவித்தார்.
திமுக மூத்த நிர்வாகிகள் பங்கேற்பு
தமிழக ஆளுநரின் இந்த அறிவிப்பிற்கு பல தரப்புகளில் இருந்து கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவர் தனது இந்த அறிவிப்பினை நிறுத்தி வைப்பதாகவும், இது குறித்து மத்திய அரசு தலைமை வழக்கறிஞரிடம் நடத்தப்போவதாகவும் நேற்று(ஜூன்.,29)நள்ளிரவு தெரிவித்துள்ளார். முன்னதாக ஆளுநரின் இந்த நடவடிக்கை குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாகவும், செந்தில் பாலாஜி விவகாரத்தினை சட்ட ரீதியாக சந்திக்கபோவதாகவும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருந்தார். ஆனால் ஆளுநர் பதவியில் இருப்போர் இனி வரும் காலங்களில் இதுபோல் தன்னிச்சையாக முடிவெடுக்காமல் இருப்பது குறித்து, இன்று(ஜூன்.,30)சென்னை தலைமை செயலகத்தில் அலுவல் பணிகளை முடித்தப்பின்னர் திமுக மூத்த நிர்வாகிகள் மற்றும் மூத்த சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கிறது.