
காங்கிரஸ் மூத்த தலைவரும், தமிழிசை சௌந்தராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் காலமானார்
செய்தி முன்னோட்டம்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் இன்று அதிகாலை வயது மூப்பினால் சென்னையில் காலமானார்.
பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜனின் தந்தையான 93 வயதான குமரி ஆனந்தனுக்கு சமீபத்தில் தமிழ்நாடு அரசின் சார்பாக தகைசால் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அவரது மறைவுக்கு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என பல தரப்பினரும் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து தமிழிசை தனது எக்ஸ் பக்கத்தில், "தமிழ் கற்றதனால் நான் தமிழ் பேசவில்லை... தமிழ் என்னைப் பெற்றதனால் நான் தமிழ் பேசுகிறேன் என்று.... பெருமையாக . பேச வைத்த என் தந்தை திரு.குமரி அனந்தன் அவர்கள்... இன்று என் அம்மாவோடு.. இரண்டர கலந்து விட்டார்..." என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
தமிழ் கற்றதனால் நான் தமிழ் பேசவில்லை... தமிழ் என்னைப் பெற்றதனால் நான் தமிழ் பேசுகிறேன் என்று.... பெருமையாக . பேச வைத்த என் தந்தை திரு.குமரி அனந்தன் அவர்கள்... இன்று என் அம்மாவோடு.. இரண்டர கலந்து விட்டார்... குமரியில்.. ஒரு கிராமத்தில் பிறந்து.. தன் முழு முயற்சியினால்...… pic.twitter.com/MxDWOHg5OJ
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisai4BJP) April 8, 2025
வாழ்க்கை
குமரி மாவட்டத்தின் MP மற்றும் MLA வாக இருந்தவர் குமரி அனந்தன்
குமரி அனந்தன் சிறந்த இலக்கியவாதி மற்றும் அரசியல்வாதி.
பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையும், மறைந்த எம்பி வசந்தகுமாரின் அண்ணனுமான குமரி ஆனந்தன் வயது மூப்பு காரணமாக தீவிர அரசியலிருந்து ஒதுங்கியிருந்தார்.
சிறுநீர் பிரச்சினைகளால் சிகிச்சை பெற்று வந்தார்.
குமரி அனந்தன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராகப் பணியாற்றியவர்.
5 முறை எம்.எல்.ஏ மற்றும் ஒரு முறை குமரி மாவட்ட எம்பியாகவும் இருந்தார். கன்னியாகுமரி மாவட்டத்தின் அகத்தீஸ்வரத்தில் பிறந்தார். அவரது இயற்பெயர் அனந்தகிருஷ்ணன்.
தமிழ் மொழி ஆர்வம் காரணமாக தமிழ் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளை முடித்த இவர் சிறந்த மேடை பேச்சாளர்.
பெருந்தலைவர் காமராஜருடன் இணைந்து பணியாற்றிய பெருமை கொண்டவர்.