நடிகை விஜயலக்ஷ்மி விவகாரத்தில், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் காவல்நிலையத்தில் ஆஜர்
நடிகை விஜயலக்ஷ்மி விவகாரத்தில் 2 முறை நேரில் ஆஜராகும் படி சம்மன் அனுப்பட்ட நிலையில், இன்று வளரசவக்கம் காவல் நிலையத்தில், தன் மனைவியுடன் ஆஜரானார், சீமான். விஜயலக்ஷ்மி, சீமான் தன்னை திருமண ஆசை காட்டி, பலமுறை கருக்கலைப்பு செய்ததாகவும், திருமணம் செய்யாமல் ஏமாற்றி விட்டதாகவும் புகாரளித்திருந்தார். கடந்த 2011 -ஆம் தொடுக்கப்பட்ட இந்த புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என சென்ற மாதம், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மீண்டும் ஒரு புகாரை பதிவு செய்தார். இதனை தொடர்ந்து சீமானுக்கு இரண்டுமுறை சம்மன் அனுப்பப்பட்டது. எனினும் அவர் ஆஜராகவில்லை.
சீமான் காவல்நிலையத்தில் ஆஜர்
இதற்கிடையே, விஜயலக்ஷ்மி, தனி ஒருவராக போராட என்னால் முடியவில்லை என்றும், சீமானை எதிர்கொள்ள எனக்கு போதிய ஆதரவு யாரிடமும் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்து புகாரை வாபஸ் பெற்றார். எனினும் இந்த விவகாரத்தில், சீமானுக்கு சம்மன் அனுப்பட்ட நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து சட்ட வல்லுனர்களிடம் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும் என காவல்துறையினர் தரப்பில் கூறப்பட்டது. இந்த நிலையில் தான், மனைவியுடன், வளசரவாக்கம் காவல்நிலையத்தில், விசாரணைக்காக சீமான் ஆஜரானார். சீமான் ஆஜராவதை தொடர்ந்து, அந்த பகுதியில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது. விசாரணைக்கு சீமானுடன் வழக்கறிஞர் ரூபன் சங்கர் உள்ளிட்ட 5 பேர் மட்டுமே காவல்நிலையம் உள்ளே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.