மதுரை திருப்பரங்குன்றத்தில் பெரும் கலவரம்: 144 தடை உத்தரவு அமல்
செய்தி முன்னோட்டம்
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயில் பகுதியில் திடீரென வெடித்த கலவரத்தைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளார். நீதிமன்ற உத்தரவின் பேரில் தீபம் ஏற்ற வந்த மனுதாரர்கள் மற்றும் அவர்களுடன் வந்த உயர் நீதிமன்ற உத்தரவின்படி பாதுகாப்பிற்காக வந்த மத்திய தொழிற் பாதுகாப்புப் படை (CISF) வீரர்கள் கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அங்கே கலவரம் வெடித்தது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#BREAKING | நீதிபதி சுவாமிநாதன் அளித்த உத்தரவுடன் CISF படையினரை கூட்டிக் கொண்டு வந்தவர்களுக்கு திருப்பரங்குன்றம் மலையேற அனுமதி மறுப்பு#SunNews | #Thiruparankundram | #MadrasHC | #KarthigaiDeepam pic.twitter.com/fLptoaousD
— Sun News (@sunnewstamil) December 3, 2025
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#WATCH | தடுப்புகளைத் தூக்கி எறிந்து போலீசாரின் மூக்கை உடைத்த கும்பல்#SunNews | #Tiruparankundram | #PoliceAttacked pic.twitter.com/lJirbIeNGD
— Sun News (@sunnewstamil) December 3, 2025
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Watch | நீதிபதி சுவாமிநாதன் உத்தரவுப்படி திருப்பரங்குன்றம் வந்த CISF படையினரை, ’ஜெய் ஸ்ரீராம்’ என வரவேற்ற போராட்டக்காரர்கள்
— Sun News (@sunnewstamil) December 3, 2025
எனினும், 144 தடை உத்தரவை சுட்டிக் காட்டி போலீசார் யாரையும் மலையில் அனுமதிக்கவில்லை#SunNews | #Thiruparankundram | #CISF | #MadrasHC | #TNPolice pic.twitter.com/u4YsGVIdQj
விவரம்
கலவர விவரம்
திருப்பரங்குன்றத்தில் உள்ள சிக்கந்தர் தர்காவுக்கு அருகே உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற மனுதாரர்களுக்கு அனுமதி அளித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. மேலும், மனுதாரர்களின் பாதுகாப்பிற்காக CISF வீரர்களை அழைத்துச் செல்லவும் நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில், இன்று மாலை கோயிலின் முன் திரண்டிருந்த இந்துத்துவா அமைப்பினர், தடுப்புகளை உடைத்துக்கொண்டு உள்ளே செல்ல முயன்றனர். இதனால் போலீஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இந்த தள்ளுமுள்ளு சம்பவத்தில் இரண்டு காவலர்களுக்கு காயம் ஏற்பட்டது. நிலைமை மோசமடைந்ததையடுத்து, சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் பொருட்டு மாவட்ட நிர்வாகம் உடனடியாக 144 தடை உத்தரவை அமல்படுத்தியது. இதனால் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.