தமிழகம் முழுவதும் போலி மருத்துவர்களை கண்டறிய சோதனை: டிஜிபி சைலேந்திரபாபு
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் உள்ள போலி மருத்துவர்களைக் கண்டறிய மாநிலம் முழுவதும் சோதனை நடந்து கொண்டிருப்பதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார்.
சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்தவமனையில் நரம்பியல் நிபுணர்களுக்காக ஒரு கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது.
இந்த கருதரங்கத்தை டிஜிபி சைலேந்திரபாபு தொடங்கி வைத்தார்.
மருத்துவமனையின் டீன் சாந்திமலர் தலைமை தாங்கினார்.
பின், நரம்பியல் அறுவை சிகிச்சை துறையினர்களில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பல மருத்துவர்களும் மருத்துவ மாணவர்களும் கலந்து கொண்டனர்.
டிஜிபி சைலேந்திரபாபு
கருத்தரங்கில் டிஜிபி சைலேந்திரபாபு கூறியது:
"மக்கள் நலமுடன் வாழ மருத்துவர்களின் ஆரோக்கியம் மிகவும் அவசியம்.
மக்களுக்கு சேவை செய்யும் குணமுள்ள மருத்துவர்கள் பலர் அரசு மருத்துவமனைகளில் தான் வேலை செய்கிறார்கள்.
எனக்கும் ஒரு காலத்தில் மருத்துவராக ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது.
ஆனால், மக்களைக் காக்கும் காவல்காரன் ஆகிவிட்டேன்.
தற்போது, பல லட்சம் இளைஞர்கள் மருத்துவராக வேண்டும் என்று ஆசை படுகிறார்கள்.
போலி மருத்துவர்களைக் கண்டறிவதற்கு மாநிலம் முழவதும் சோதனை நடைபெற்று கொண்டிருக்கிறது.
சமீபகாலமாக மருத்துவ துறையில் தொழிநுட்பங்கள் நல்ல வளர்ச்சி பெற்றிருக்கிறது" என்று இந்த நிகழ்ச்சியில் பேசும் போது டிஜிபி சைலேந்திரபாபு கூறி இருக்கிறார்.