
தர்மபுரியில் வகுப்பறையை அடித்து நொறுக்கிய அரசு பள்ளி மாணவர்கள் - வைரலாகும் வீடியோ
செய்தி முன்னோட்டம்
தர்மபுரி, அமானிமல்லாபுரத்தில் இயங்கிவரும் அரசு மேல்நிலை பள்ளியில் 700க்கும்மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.
40ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள், இங்கு கடந்தவாரம் அரசு பொதுத்தேர்வு எழுதும் 11, 12ம்வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத்தேர்வு தொடங்கியுள்ளது.
இந்தத்தேர்வுகள் முடிவடைந்த நிலையில், சில மாணவர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.
அப்போது மாணவ-மாணவிகள் ஒன்று சேர்ந்து மேஜை நாற்காலிகளை தூக்கிவீசியதோடு, மின்விசிறி, சுவிட்ச் போர்டுகளை கம்பால் அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர்.
இந்த சம்பவம் குறித்து அந்த மாணவர்களின் பெற்றோருக்கு தகவலளித்த பள்ளி தலைமைஆசிரியர், இனி இவ்வாறு செய்யமாட்டோம் என்று மாணவர்களிடம் எழுதி வாங்கியதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், ரகளையில் ஈடுபட்ட 5 மாணவர்களை 5 நாட்களுக்கு இடைநீக்கம் செய்து கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
தர்மபுரியில் வகுப்பறையை அடித்து நொறுக்கும் அரசு பள்ளி மாணவர்கள்
தருமபுரி அரசு பள்ளியில் பொருட்களை அடித்து நொறுக்கிய மாணவ மாணவிகள் 5 நாட்கள் சஸ்பெண்ட்#Dharmapuri pic.twitter.com/wXy0i4Uphc
— Tamil Diary (@TamildiaryIn) March 9, 2023