NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திருச்செந்தூர் அருகே பரிதாபம் - திடீர் வெடிச்சத்தம் கேட்டு 10 வயது பள்ளி மாணவன் பலி
    அடுத்த செய்திக் கட்டுரை
    திருச்செந்தூர் அருகே பரிதாபம் - திடீர் வெடிச்சத்தம் கேட்டு 10 வயது பள்ளி மாணவன் பலி
    வெடிச்சத்தம் கேட்டு உயிரிழந்த மாணவன்

    திருச்செந்தூர் அருகே பரிதாபம் - திடீர் வெடிச்சத்தம் கேட்டு 10 வயது பள்ளி மாணவன் பலி

    எழுதியவர் Nivetha P
    Jan 03, 2023
    11:58 pm

    செய்தி முன்னோட்டம்

    திருச்செந்தூர் அருகே, பள்ளி மாணவன் விளையாடி கொண்டிருக்கையில் திடீரென ஓர் பலத்த வெடிச்சத்தத்தை கேட்டு மயங்கி சுருண்டு விழுந்துள்ளான்.

    அவனை மருத்துவமனைக்கு கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டதையடுத்து சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தான்.

    இது குறித்து தற்போது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    திருச்செந்தூர் மாவட்டம் அருகே தோப்பூர் என்னும் கிராமத்தை சேர்ந்தவர் சிவபெருமாள்.

    இவருக்கு செல்வக்குமாரி என்னும் மனைவியும், 10 வயதில் அஜய் என்னும் மகன் உள்பட இரண்டு மகன்களும் உள்ளனர்.

    சிவபெருமாள் மகனான அஜய்குமார் அந்த பகுதியிலுள்ள ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார்.

    அரையாண்டு பள்ளி விடுமுறை என்பதால், அந்த பள்ளியில் கழிப்பிட பராமரிப்பு பணி நடைபெற்றுள்ளது.

    பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் போராட்டம்

    சிகிச்சை பலனின்றி பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்த மாணவன் அஜய்குமார்

    சம்பவ தினத்தன்று அஜய்குமார் தனது நண்பர்களோடு அப்பகுதியில் விளையாடி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

    அப்போது அங்கு திடீரென பயங்கரமான வெடிச்சத்தம் ஒன்று கேட்டுள்ளது.

    இதனையடுத்து அஜய்குமார் மயக்கம் போட்டு விழுந்துள்ளான்.

    அதில் அவனுக்கு தலையில் காயம் ஏற்பட்டதால், அவனுக்கு முதலுதவி செய்யப்பட்டுள்ளது.

    பின்னர் அவனை மீட்டு நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

    அதன்பின்னர் அஜய்குமாரை மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துள்ளனர்.

    அங்கு மாணவனின் உடல்நிலை மோசமடைந்ததால் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு அவசர சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

    எனினும் அச்சிறுவன் சிகிச்சை பலனின்றி இன்று காலையில் உயிரிழந்துள்ளான்.

    இதனையடுத்து பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க கோரி அச்சிறுவனின் உறவினர்கள் உடலை வாங்காமல் மருத்துவமனை வாசலில் போராட்டம் நடத்தியதாக கூறப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025