Loading...
உங்கள் பகுதியில் நாளை (ஜூலை 30) மின்தடையா? உடனே செக் பண்ணுங்க!
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

உங்கள் பகுதியில் நாளை (ஜூலை 30) மின்தடையா? உடனே செக் பண்ணுங்க!

எழுதியவர் Vasuki
Jul 29, 2026
01:18 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, நாளை புதன் கிழமை (ஜூலை 30) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் தங்களது அத்தியாவசியத் தேவைகளுக்கு ஏற்ப முன்கூட்டியே தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

சென்னை மாவட்டம்: வெள்ளனூர், கொள்ளுமேடு, மகளிர் தொழிற்பேட்டை, போரூர், லட்சுமிபுரம், பம்மதுகுளம், கோனிமேடு, ஈஸ்வரன் நகர், எல்லம்மன்பேட்டை, டி.எச். ரோடு, எடப்பாளையம் ரோடு, கன்னடபாளையம், காட்டூர், அரிகம்பேடு மற்றும் காந்தி நகர், பல்லாவரம், பவானி நகர், ராஜீவ் காந்தி நகர், யாதவா தெரு, மகாவீர் சாலை, சுபம் நகர், அம்மன் நகர்.

தேனி மாவட்டம்: தேனி - வி.சி.புரம், சித்தார்பட்டி, சுப்புலாபுரம்.

விழுப்புரம் மாவட்டம்: திண்டிவனம், கிளியனூர், உப்புவெள்ளூர், சாரம், ஊரல், கொள்ளார், சிப்காட் பகுதிகள், சந்தைமேடு, அய்யந்தோப்பு, செஞ்சி ரோடு, வசந்தபுரம், சஞ்சீவிராயன்பேட்டை, திருவள்ளுவர் நகர், மருத்துவமனை சாலை, கிடங்கல், மைலம்.

தஞ்சாவூர் & திருவாரூர் மாவட்டம்: பட்டுக்கோட்டை, ஆலடிக்குமுளை, திருமாக்கோட்டை, வள்ளூர், பழையகோட்டை, ஆர்.ஜி.புரம் ஆகிய பகுதிகள்.

ADVERTISEMENT