LOADING...
பவர் கட் அப்டேட்: நாளை (ஜூலை 08) உங்க ஏரியால பவர் கட் இருக்கா?
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

பவர் கட் அப்டேட்: நாளை (ஜூலை 08) உங்க ஏரியால பவர் கட் இருக்கா?

எழுதியவர் Vasuki
Jul 07, 2026
12:22 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, நாளை புதன் கிழமை (ஜூலை 8) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் தங்களது அத்தியாவசியத் தேவைகளுக்கு ஏற்ப முன்கூட்டியே தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

புதுக்கோட்டை மாவட்டம்: அறந்தாங்கி நகர்ப்புற துணை மின் நிலையத்திற்குட்பட்ட அறந்தாங்கி டவுன் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள். அரிமளம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட அரிமளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகள். மேலும், ஆலங்குடி மற்றும் ஆவுடையார்கோவில் வட்டாரப்பகுதிகள். மரமடக்கி துணை மின் நிலையம் மற்றும் அலியாநிலை துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகள். வடகட்டுப்பட்டி துணை மின் நிலையத்திற்குட்பட்ட தள்ளம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமப் பகுதிகள்.

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

கரூர் மாவட்டம்: கணியாளம்பட்டி, ஜெகதாபி, பாலப்பட்டி, வில்வமரத்துப்பட்டி, கணியாளம்பட்டி, வீரியப்பட்டி, சுண்டுகுழிப்பட்டி, முத்துரெங்கம்பட்டி, பண்ணப்பட்டி, காளையப்பட்டி, வரவணை வடக்கு, மேல்பகுதி, சி.புதூர் மற்றும் வீராலிப்பட்டி ஆகிய சுற்றுவட்டார பகுதிகள். திண்டுக்கல் மாவட்டம்: ரெட்டியார்சத்திரம், செம்மடைப்பட்டி மற்றும் பழங்கானூத்து ஆகிய முக்கிய பகுதிகள். தர்மபுரி மாவட்டம்: அதியமான்கோட்டை, ஏலகிரி, சாமிசெட்டிப்பட்டி, பாளையம்புதூர், தடங்கம், ரெட்டிஹள்ளி, ஹெச்பிசிஎல் (HPCL) வளாகப் பகுதி, நாகர்கூடல், பரிகம், காவலர் குடியிருப்பு (Police quarters) மற்றும் வெண்ணம்பட்டி ஆகிய பகுதிகள்.

Advertisement