NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பெங்களூரு வழக்கறிஞரின் ஆடையை அவிழ்த்து சோதனை நடத்தி ரூ.14 லட்சம் பறிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    பெங்களூரு வழக்கறிஞரின் ஆடையை அவிழ்த்து சோதனை நடத்தி ரூ.14 லட்சம் பறிப்பு

    பெங்களூரு வழக்கறிஞரின் ஆடையை அவிழ்த்து சோதனை நடத்தி ரூ.14 லட்சம் பறிப்பு

    எழுதியவர் Sindhuja SM
    Apr 10, 2024
    12:56 pm

    செய்தி முன்னோட்டம்

    பெங்களூருவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவரிடம் இருந்து 14 லட்சத்துக்கும் அதிகமான பணத்தை ஏமாற்றி பறித்த ஒரு கும்பல், போதைப்பொருள் சோதனைக்காக அவரது ஆடைகளை கழற்றி அதை வீடியோவிலும் பதிவு செய்திருக்கிறது.

    அதற்கு பிறகு, அந்தப் பெண்ணின் நிர்வாண வீடியோக்கள் மூலம் அந்த கும்பல் அவரிடம் இருந்து கூடுதலாக ரூ.10 லட்சத்தை மிரட்டி பணம் பறிக்க முயன்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    மும்பை சைபர் கிரைம் குழுவினர் என்று கூறி அந்த பெண்ணை ஏமாற்றிய ஒரு கும்பல் பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலில் கேமராக்கள் மற்றும் மைக்குகளை பொருத்தி, அவரை 2 நாட்கள் பிணையகைதியாக வைத்திருந்திருக்கிறது.

    கடந்த புதன்கிழமை (ஏப்ரல் 3) ஃபெடெக்ஸ் நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறி அந்த பெங்களூரு வழக்கறிஞருக்கு ஒரு அழைப்பு வந்திருக்கிறது.

    பெங்களூரு

    பெண் வழக்கறிஞரை ஏமாற்றி பணம் பறிப்பு 

    அந்த பெண் வழக்கறிஞரின் பெயரில் தாய்லாந்துக்கு ஒரு பார்சல் அனுப்பப்பட்டதாகவும், அந்த பார்சலில் ஐந்து பாஸ்போர்ட்டுகள், மூன்று கிரெடிட் கார்டுகள் மற்றும் தடைசெய்யப்பட்ட 140 எக்ஸ்டசி மாத்திரைகள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

    இந்த தகவலை கேட்ட அந்த பெண் அது தன்னுடையது அல்ல என்று கூறி இருக்கிறார்.

    உடனே, இந்த சம்பவம் குறித்து மும்பை சைபர் கிரைமிடம் புகார் அளிக்கும் படி அவரிடம் அறிவுறுத்தி இருக்கின்றனர்.

    அதன் பிறகு, மும்பை சைபர் கிரைம் குழுவினர் போல நடித்து அந்த வழக்கறிஞரை ஏமாற்றிய அந்த கும்பல் 14 லட்சத்துக்கும் அதிகமான பணத்தை ஏமாற்றி பறித்தது மட்டுமல்லாமல், போதைப்பொருள் சோதனை என்று கூறி அவரது ஆடைகளை கழற்றி அதை வீடியோவிலும் பதிவு செய்திருக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பெங்களூர்

    சமீபத்திய

    பாகிஸ்தான் சூப்பர் லீக் காலவரையறை இன்றி நிறுத்ததி வைப்பதாக அறிவித்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கிரிக்கெட்
    பஞ்சாபின் ஃபிரோஸ்பூரில் பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்; மூன்று பேருக்கு காயம் பஞ்சாப்
    ஸ்ரீநகர் விமான நிலையத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் முயற்சி? பாதுகாப்புப்படை எதிர் நடவடிக்கை ஜம்மு காஷ்மீர்
    இந்தியாவிற்குள் அத்துமீறி ஊடுருவிய பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது பாதுகாப்புப்படை இந்தியா

    பெங்களூர்

    கோவை-பெங்களூர் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையின் சோதனை ஓட்டம் துவக்கம்  வந்தே பாரத்
    கிரிக்கெட்டில் கால் பதித்த நடிகர் சூர்யா- புதிய கிரிக்கெட் அணியை வாங்கினார் நடிகர் சூர்யா
    கடைகளின் சைன்போர்டுகளில் கன்னடா கட்டாயம்: கலவர பூமியான பெங்களூர் வீதிகள் கர்நாடகா
    "இது இங்கிலாந்து இல்லை"- பெங்களூரின் 60% கன்னட உத்தரவுக்கு, மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஆதரவு கர்நாடகா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025