மோசடி அழைப்புகள் குறித்து புகாரளிக்க சக்ஷு என்ற போர்ட்டலை அறிமுகப்படுத்தியது இந்திய அரசு
செய்தி முன்னோட்டம்
இந்தியா: தொலை தொடர்பும், இணையமும் மனிதர்களின் வாழ்வில் ஒரு இன்றியமையாத விஷயமாக மாறி வருகிறது.
இதனால், மோசடி அழைப்புகளும், மெசேஜ்களும் அதிகரித்து வருகின்றன. தொலை பேசி மூலம் பணமோசடி செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
வங்கிகளில் இருந்தும், அரசாங்கத்தில் இருந்தும் பேசுவதாக கூறி நிறைய பேர் மக்களை ஏமாற்றி பணத்தை பறிக்கின்றனர்.
இந்நிலையில், இந்த சிக்கலைச் சமாளிக்க, இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) சக்ஷு என்ற புதிய தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. சக்ஷு எவ்வாறு செயல்படுகிறது மற்றும் அது எவ்வாறு பயனர்களைப் பாதுகாக்க உதவும் என்பதை இப்போது பார்க்கலாம்.
'சக்ஷு' என்றால் இந்தி மொழியில் கண் என்று பொருள்படும். சக்ஷு தளம், மொபைல் போன் மூலம் மோசடி செய்பவர்கள் குறித்து புகார் அளிக்க உதவுகிறது.
இந்தியா
சக்ஷுவில் புகார் அளித்தால் என்ன ஆகும்?
இது போன்ற மோசடிகளை செய்பவர்கள் வங்கிகள், கிரெடிட் கார்டு நிறுவனங்கள், டிஜிட்டல் பேமெண்ட் தளங்கள், சிம் வழங்குநர்கள், எரிவாயு இணைப்புகள் போன்ற நிறுவனங்களில் இருந்து அழைப்பதாக கூறி மக்களின் தனிப்பட்ட விவரங்களை சேகரித்து பணத்தை பறிக்கின்றன.
அப்படி வரும் அழைப்புங்கள் உண்மை என்று நம்ப வைக்கும் அளவுக்கு இருப்பதால், நிறைய பேர் இதில் ஏமாந்து விடுகின்றனர்.
இந்நிலையில், இது போன்ற சந்தேகத்திற்கிடமான எண்ணைப் பயனர் ஒருவர் சக்ஷுவில் புகாரளித்தால், அந்த விவரங்களை TRAI ஆராய்து, அந்த எண் மோசடியான செயல்களில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால், அதன் சேவை நிறுத்தப்பட்டு, குற்றவாளிகளுக்கு எதிராக தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
மோசடி அழைப்புகள் மட்டுமின்றி மோசடி SMS மற்றும் வாட்சப் மெசேஜ்களையும் சக்ஷுவில் புகாரளிக்கலாம்.